கொரோனா வைரஸ் : பைஜுஸ், அன்அகாடமி ஆன்லைன் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு

தில்லிப் பல்கலைக்கழகம், அனைத்து இளங்கலை, முதுகலை திட்டங்களுக்கான ஆய்வுப் பொருட்களை அந்தந்த கல்லூரி, துறை வலைத்தளங்களில் வாரந்தோறும் புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது.

By: Published: March 14, 2020, 3:49:36 PM

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் காரணத்தால், உயர்க்கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கற்பித்தல் முறையை நோக்கி திரும்பியுள்ளன. தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி ஐஐடி, ஜேஎன்யூ மற்றும் மாநில அளவிலான அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் வைரஸ் பரவாமல் தடுக்க மூடப்பட்டுள்ளன.

ஐ.ஐ.எம் அகமதாபாத், ஐ.ஐ.எம் காஷிப்பூர், ஐ.ஐ.எம் இந்தூர், ஐ.எம்.டி காஜியாபாத், சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர பட்டமளிப்பு விழாவினை ஒத்திவைத்துள்ளன.

Explained : கொரோனா வைரஸ் ஒரு இடத்தில் எவ்வளவு காலம் வாழும்?

இதன் விளைவாக, பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் கல்வி சேவைகளை கொடுக்கத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, தில்லிப் பல்கலைக்கழகம், அனைத்து இளங்கலை, முதுகலை திட்டங்களுக்கான ஆய்வுப் பொருட்களை அந்தந்த கல்லூரி, துறை வலைத்தளங்களில் வாரந்தோறும் புதுப்பிப்பதாக அறிவித்துள்ளது. வகுப்பு நேரங்களில் இ- ரிசோர்ஸ் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் மாணவர்கள் அணுக முடியும் என்றும் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. மார்ச் 31, 2020 வரை அனைத்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூட டெல்லி அரசு உத்தரவிட்டதை அடுத்து தில்லிப் பல்கலைக்கலகம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

அச்சத்தின் விளிம்பில் உலகம்: கொரோனா வைரசால் 4,948 பேர் உயிரிழப்பு

அத்தகைய விரிவான ஆன்லைன் இருப்பு இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு, பல ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றன. பைஜுஸ் நிறுவனம் ஏப்ரல் இறுதி வரை தனது செயலியை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு மத்தியில், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற தேர்வர்களுக்கு 20,000 இலவச நேரடி வகுப்புகள் நடைபெறும்  என்று அன்அகாடமி தெரிவித்துள்ளது.

கட்டுரை ஆங்கிலத்தில் படிக்க, Amid coronavirus outbreak, e-learning platforms extend support

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Unacademy byjus free access to prevent the spread of the corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X