Chennai’s mental health institute: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் முதன் முறையாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
மக்களவைக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை முதலே எல்லா வாக்குசாவடியிலும் எல்லா மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மன நலம் பாதிக்கப்பட்ட மக்களவை தேர்தலில் இன்று வாக்களித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 159 மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ள நிகழ்வு நெகிழ வைத்துள்ளது.
சிதம்பரம் அரியலூரில் இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல்
இவர்களில் ஆண்கள் 103 பேரும் பெண்கள் 56 பேரும் அடங்குவர். இவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள். சுயமாக வாக்களிக்கத் தகுதியுடைய 159 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், மனநலக் காப்பகப் பேராசிரியர்களும் உருவாக்கித் தந்துள்ளனர். இதற்காக மனநலக் காப்பகத்துக்குள்ளேயே சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
900 பேரில் இருந்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 159 வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனநலக் காப்பகம் அமைந்துள்ள பகுதி மத்திய சென்னை தொகுதிக்குள் வருவதால், அந்தத் தொகுதியின் வேட்பாளர்கள் யார், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களின் சின்னம் ஆகியவை குறித்து இரண்டு நாட்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டதாக மனநல காப்பக்கத்தின் இயக்குநர் பூர்ண சந்திரிகா தெரிவித்துள்ளார்.
18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்… வாக்குப்பதிவு நிலவரம்!