Advertisment

election 2019 live updates : துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?

ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates : வீடு திரும்பினார் துரைமுருகன்

election 2019 live updates pm modi visit : கோவை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவையில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதற்காக கொடிசியா மைதானத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

மேலும் படிக்க .. நதிகளை இணைக்க தனி ஆணையம்: பாஜக தேர்தல் அறிக்கையில் 75 அம்சங்கள்

Live Blog

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.














Highlights

    17:21 (IST)09 Apr 2019

    அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது ?

    அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும்.  வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி இறுதி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே மாதம் 2ம் தேதி வாபஸ் பெற இறுதி நாளாகும்.  வேட்புமனுக்கள் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 30ம் தேதி நடைபெறும்.

    இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

    16:00 (IST)09 Apr 2019

    துரைமுருகன் மீது வழக்குப்பதிவா?

    வேலூரில் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு  செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    15:09 (IST)09 Apr 2019

    தமிழிசை பேட்டி!

    நதிகள் இணைப்பு குறித்த பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினிகாந்த் வரவேற்றது நல்லது என்றும் நதிகள் இணைப்பு என்பது பாஜக - வின்  நீண்டகால திட்டம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

    14:19 (IST)09 Apr 2019

    பாஜக தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்த்:

    ”பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால்  நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலைகிடைக்கும். பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும் ” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். 

    14:17 (IST)09 Apr 2019

    ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். தேர்தலில் கமலுக்கு ஆதரவு உண்டா? என்ற கேள்விக்கு பதில் கூறிய ரஜினிகாந்த், “ எனது அரசியல் நிலைப்பாட்டை முன்பே தெரிவித்துவிட்டேன்.  அதில் எந்த மாற்றமும் இல்லை.   கமலுக்கு ஆதரவா என்று கேள்வி கேட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்துவிடாதீர்கள்.” என்றார். 

     

     

    14:12 (IST)09 Apr 2019

    ரஜினிகாந்த் பேட்டி!

    12:48 (IST)09 Apr 2019

    ராமதாஸ் குற்றச்சாட்டு!

    பாமக போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு கேட்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக ராமதாஸ்  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் விசிக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

    11:38 (IST)09 Apr 2019

    சீமானுக்கு வாழ்த்து!

    கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராசு, நாம்தமிழர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று, சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த‌ சம்பவம் திமுக தொண்டர்கள் மத்தியில் அதிரூப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

    10:39 (IST)09 Apr 2019

    மோடி பேசும் பொதுக்கூட்டம் முழு விபரம்:

    மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மைசூரில் இருந்து பிரதமர் மோடி இன்று மாலை 6.50 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்கிறார். மாலை 7 மணி முதல் 7.50 மணி வரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பின்னர் 7.50 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். இரவு 8 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    10:21 (IST)09 Apr 2019

    குண்டு துளைக்காத கார்!

    பிரதமர் வருகையையொட்டி, டெல்லியில் இருந்து குண்டு துளைக்காத  4 கார்கள்  கோவைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், கோவையில் முகாமிட்டு பிரதமரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    09:04 (IST)09 Apr 2019

    விழாவில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள்!

    முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

    08:38 (IST)09 Apr 2019

    பிரதமர் மோடியை வரவேற்கும் முதல்வர்!

    இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். தனி விமானம் மூலம் கோவை வரும் பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்.

    பிரதமர் வருகையையொட்டி விமான நிலையம் முதல் கொடிசியா மைதானம் வரையிலான பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Dmk Narendra Modi General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment