Election 2019 Tamil Nadu ADMK, DMK, MNM, AMMK campaigning live updates : சரியாக கூறினால் இன்னும் 17 நாட்களில் நடைபெற உள்ளது நாடாளுமன்ற தேர்தல். எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை நாம் அனைவரும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆனாலும் ஆங்காங்கே தேர்தல் நிமித்தமாக வாக்குறுதிகளை கொடுப்பதும், மக்களிடம் வாக்கு சேகரிப்பதும் என பிசியாகவே உள்ளனர் தமிழக தலைவர்களும், சாலைகளும். இன்று எங்கே யார், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் , அங்கே என்ன ருசிகரமான சம்பவம் நிகழ உள்ளது என்பதையும் காண இணைந்திருங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய சேவையுடன்…
ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்படும்.
Web Title:Election 2019 tamil nadu admk dmk mnm ammk campaigning live updates
கேரளாவின் வயநாட்டினை தன்னுடைய இரண்டாவது தொகுதியாக தேர்வு செய்துள்ளார் ராகுல் காந்தி. அங்கு தன்னுடைய வேட்புமனுவினை வரும் வியாழனன்று (04/04/2019) தாக்கல் செய்ய உள்ளார் ராகுல் காந்தி.
மேலும் படிக்க : ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட காரணம் என்ன ?
சிமெண்ட் குடோனில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தேர்தல் ரத்தாகுமா என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு வருமானத்துறையின் அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும். அங்கு தான் வேலூர் தேர்தல் குறித்து முடிவு எட்டப்படும் என்று சத்யப்ரதா கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 78.12 கோடி ரூபாய் பணம், 328 கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்
வேலூர் தொகுதியில் போட்டியாளராக துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் மற்றும் இன்று காலை முதல் துரை முருகனின் இல்லம், அவரது மகன் நடத்தி வரும் கல்லூரி, அவருடைய இல்லம், மற்றும் இதர வேலூர் பகுதியில் இருக்கும் முக்கிய திமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரியினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலைபள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், கீழ்மேட்டூரில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. காட்பாடி வஞ்சூர் பகுதியில் உள்ள அக்கட்சி ஒன்றிய செயலாளர் பெருமாள் என்பவருக்கு சொந்தமானவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கதி ஆனந்திற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.
புதுவையில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தை திறந்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல் ஹாசன்
சோளிங்கர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். திமுகவினரை தேர்தல் பணிகள் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் தான் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. எதிர்கட்சிகளை மிரட்டவே இந்த வருமான வரி சோதனைகள் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளாராக களம் இறங்க இருக்க இருக்கும் திமுக பொருளாளர் துரை முருகன் மகன் கதிர் ஆனந்த், வருமான வரித்துறையினர் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் நடைபெறுவதால் தேர்தல் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் ”வருமான வரி சோதனை என்பது தவறு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விசயம் தான்” என்று கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவினர் தங்களின் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று ராமநாதபுரம் மாவட்டத்தின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெரியபட்டிணம் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் பாட்டில் வீசியுள்ளார். நயினார் அருகே இருந்த உடையப்பன் என்பவரது தலையில் பாட்டில் விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது புதுக்கோட்டையில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மோடி மீண்டும் பிரதமரானால் தான் நாடு பாதுகாப்புடன் இருக்கும் என்று கூறிய அவர், ஸ்டாலின் தோல்வி பயத்தால் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசிவருகிறார் என்று பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை அக்கட்சி வெளியிடுகிறது.
தேர்தல் வேலைகள் மிகவும் மும்பரமாக நடைபெற்று வரும் தருணத்தில் திமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் வேலூர் கல்புதூரில் அவருக்கு சொந்தமான கல்லூரி ஒன்றில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காட்பாடி அருகில் உள்ள பள்ளிக்குப்பத்தில் இருக்கும் திமுக பிரமுகர் பூஞ்சோலை ஸ்ரீநிவாசன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புதுவை வேட்பாளர் டாக்டர் MAS சுப்ரமணியத்துக்கு வாக்குகள் சேகரித்துவிட்டு பின்னர், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் வி. அண்ணாமலைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
ராமநாதபுரம், கோவை, தேனி மறும் சேலம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக 8,15 மற்றும் 16 தேதிகளில் தமிழகம் வருகை புரிகிறார் மோடி. சிவகங்கை, கோவை, மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக அமித்ஷா வருகை புரிய உள்ளார்.
பாஜக - அதிமுக மெகா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் வேட்பாளர்களுக்காக ஓட்டுக் கேட்க மத்தியில் இருந்து யார் வரப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. பாஜக தரப்பு சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் நிற்கிறது. அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் ஏப்ரல் இரண்டாவது வாரம் தமிழகம் வருகை புரியலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.