General Election 2019 Tamil Nadu Live Updates : வருகின்ற 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய தேர்தல் ஆணையம் இன்று காவல்த்துறையினர் மற்றும் அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
மேலும் படிக்க : வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆகுமா? தேர்தல் ஆணையர் விளக்கம்
General Election 2019 Tamil Nadu Live Updates : மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம்
இன்று காலை 10 மணிக்கு அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. நாளை காவல்த்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர், முதன்மை செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளது தேர்தல் ஆணையம்.
Live Blog
டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களான அலோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.
திமுக பொருளாளர் துரை முருகனுக்கு சொந்தமான இடங்களிலும், வேலூரில் இருக்கும் இதர திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் கடந்த ஞாயிறு துவங்கி வருமான வரியினர் சோதனை நடத்தி வந்தனர். 7 இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை குறித்த அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக இன்று தாக்கல் செய்தது வருமான வரித்துறை. இது தொடர்பான விசாரணை முடிவடைந்த பின்னர் வேலூர் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரிய வரும்.
நேற்று சென்னை பாரதி புத்தகாலயத்தில் வெளியிட இருந்த ரஃபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையமோ அப்படி எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூறி உத்தரவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் இன்று உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
ரஃபேல் போர் விமானம் பேர ஒப்பந்தம் தொடர்பான முழுமையான தகவல்களையும் படிக்க
தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றார்கள். திமுக சார்பில் பங்கேற்ற எம்.பி. ஆர்.எஸ். பாரதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும் கூட காப்பீடு திட்டம் தொடர்பான தபால்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் நகல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் வாங்கியுள்ள தங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முக ஸ்டாலின். 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றூம் இந்த தள்ளுபடி குறித்த உறுதியினை திமுக தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
31ம் தேதி மாலை 5 மணிக்கு நமோ தொலைக்காட்சி பிரதமர் நரேந்திர மோடியால் “மெய்ன் பி சௌகிதார்” நிகழ்ச்சியின் போது துவங்கி வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் ஆணையத்தினரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரகத்திற்கு விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூ, வேலூரில் சோதனை இன்னும் முடியவைல்லை. அந்த சோதனை தொடர்பான முடிவுகள் எதுவும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. முழுமையான அளவில் சோதனைகள் முடிவுற்ற பின்னரே அறிக்கை எங்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். சோதனை நடக்கும் இடங்களை பார்வையிட செலவினப் பார்வையாளர்கள் உள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
7 தேசிய கட்சிகள் மற்றும் 3 மாநில கட்சிகளான அதிமுக, திமுக, மற்றும் தேமுதிக கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு.
நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக தேர்தல் ஆணையர்கள் அலோக் லவசா, சுஷீல் சந்திரா, திலீப் சர்மா, திரெந்திர ஒஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights