தேர்தல் 2019 : துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி. ரெய்ட் தொடர்பான அறிக்கைகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு

வேலூரில் திமுக பிரமுகர்கள் வீடு மற்றும் கல்லூரி உட்பட 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அறிக்கைகள் சமர்பிப்பு

By: Apr 3, 2019, 6:21:58 PM

General Election 2019 Tamil Nadu Live Updates : வருகின்ற 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய தேர்தல் ஆணையம் இன்று காவல்த்துறையினர் மற்றும் அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க : வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆகுமா? தேர்தல் ஆணையர் விளக்கம்

General Election 2019 Tamil Nadu Live Updates : மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தல்  ஆணையம் ஆலோசனைக் கூட்டம்

இன்று காலை 10 மணிக்கு அரசியல் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது.  நாளை காவல்த்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர், முதன்மை செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளது தேர்தல் ஆணையம்.

Live Blog
டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களான அலோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.
15:38 (IST)03 Apr 2019
வருமான வரி சோதனை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு

திமுக பொருளாளர் துரை முருகனுக்கு சொந்தமான இடங்களிலும், வேலூரில் இருக்கும் இதர திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் கடந்த ஞாயிறு துவங்கி வருமான வரியினர் சோதனை நடத்தி வந்தனர். 7 இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை குறித்த அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக இன்று தாக்கல் செய்தது வருமான வரித்துறை. இது தொடர்பான விசாரணை முடிவடைந்த பின்னர் வேலூர் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரிய வரும்.

15:31 (IST)03 Apr 2019
அதிமுகவில் இணைந்த வைகோவின் சகோதரி மகன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி மகன் கார்த்திகேயன் கோவில்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

14:45 (IST)03 Apr 2019
மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்பு.

14:45 (IST)03 Apr 2019
மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை. சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்பு.

14:28 (IST)03 Apr 2019
ரபேல் புத்தகம் பறிமுதல் - அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பு

நேற்று சென்னை பாரதி புத்தகாலயத்தில் வெளியிட இருந்த ரஃபேல் பேர ஊழல் தொடர்பான புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையமோ அப்படி எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூறி உத்தரவிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் இன்று உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

ரஃபேல் போர் விமானம் பேர ஒப்பந்தம் தொடர்பான முழுமையான தகவல்களையும் படிக்க

12:55 (IST)03 Apr 2019
ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பு

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றார்கள். திமுக சார்பில் பங்கேற்ற எம்.பி. ஆர்.எஸ். பாரதி  தேர்தல்  நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும் கூட காப்பீடு திட்டம் தொடர்பான தபால்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் நகல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

12:33 (IST)03 Apr 2019
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தேர்தல் ஆணையர்கள்

12:32 (IST)03 Apr 2019
தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

12:31 (IST)03 Apr 2019
தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள்

Caption

12:13 (IST)03 Apr 2019
விவசாயிகளின் 5 சவரன் வரையிலான தங்க நகைக் கடன் ரத்து - முக ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் வாங்கியுள்ள தங்க நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் முக ஸ்டாலின். 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றூம் இந்த தள்ளுபடி குறித்த உறுதியினை திமுக தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

11:12 (IST)03 Apr 2019
நமோ டிவி - விளக்கம் அளிக்க தொலைத் தொடர்பு அமைச்சரகத்திற்கு நோட்டீஸ்

31ம் தேதி மாலை 5 மணிக்கு நமோ தொலைக்காட்சி பிரதமர் நரேந்திர மோடியால் “மெய்ன் பி சௌகிதார்” நிகழ்ச்சியின் போது துவங்கி வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் ஆணையத்தினரிடம் புகார் அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரகத்திற்கு விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்

11:02 (IST)03 Apr 2019
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 80 கோடி ரூபாய் பணமும், 468 கிலோ தங்கமும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

10:57 (IST)03 Apr 2019
வேலூர் வருமான வரி சோதனை குறித்து சத்யபிரதா சாஹூ

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூ, வேலூரில் சோதனை இன்னும் முடியவைல்லை. அந்த சோதனை தொடர்பான முடிவுகள் எதுவும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. முழுமையான அளவில் சோதனைகள் முடிவுற்ற பின்னரே அறிக்கை எங்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.  சோதனை நடக்கும் இடங்களை பார்வையிட செலவினப் பார்வையாளர்கள் உள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

10:40 (IST)03 Apr 2019
10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

தேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைச்சாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

10:37 (IST)03 Apr 2019
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கூட்டம் துவங்கியது

7 தேசிய கட்சிகள் மற்றும் 3 மாநில கட்சிகளான அதிமுக, திமுக, மற்றும் தேமுதிக கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு.

09:40 (IST)03 Apr 2019
தலைமை தேர்தல் ஆணையர் பங்கேற்கவில்லை

நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக தேர்தல்  ஆணையர்கள் அலோக் லவசா, சுஷீல் சந்திரா, திலீப் சர்மா, திரெந்திர ஒஜா ஆகியோர் பங்கேற்கின்றனர். 

09:23 (IST)03 Apr 2019
நாளையும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம்

நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், டிஜிபிக்கள், காவல் கண்காணிப்பாளர்கள், முதன்மை செயலாளர், வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

09:21 (IST)03 Apr 2019
தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை

கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை முடிவுற்ற பின்னர் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்படும்.

09:20 (IST)03 Apr 2019
10 மணிக்கு கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

காலை 10 மணிக்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதம் நடைபெற உள்ளது

Web Title:General election 2019 tamil nadu live updates ec meeting with party members

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X