17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நேற்று(மே.23) நடந்து முடிந்திருக்கிறது. 'எக்ஸிட் போல்' முடிவுகள் கணித்ததை விட எகிறி அடித்த பாஜக கூட்டணி, 350 தொகுதியில் வெற்றிப் பெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிறது. வரும் மே 30ம் தேதி பிரதமர் மோடி 2 முறையாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அனல் வீசுவதில் கோடை வெயிலுடன் சரமாரியாக போட்டியிட்டது மக்களவை தேர்தல் களம். இறுதியில், திமுக 38 எம்.பி.க்களை அள்ளிக் கொண்டு போக, அதிமுக ஒரேயொரு எம்.பி.யை மட்டும் தங்கள் முன் நிறுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க - 16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.
மேலும் படிக்க - 14 மாத குழந்தையை மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர் : கமல்ஹாசன்
இந்நிலையில், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார் என்பதை எங்கே பார்ப்போம்.
தமிழிசை சவுந்திரராஜன் - தூத்துக்குடி
ஹெச்.ராஜா - சிவகங்கை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - தேனி
அன்புமணி - தருமபுரி
தம்பிதுரை - கரூர்
பொன்.ராதா கிருஷ்ணன் - கன்னியாகுமரி
சி.பி.ராதாகிருஷ்ணன் - கோவை
டாக்டர்.கிருஷ்ணசாமி - தென்காசி
தங்க தமிழ் செல்வன் - தேனி
எல்.கே.சுதீஷ் - கள்ளக்குறிச்சி
கே.பி.முனுசாமி - கிருஷ்ணகிரி
நயினார் நாகேந்திரன் - ராமநாதபுரம்
ஜெயவர்தன் - தென் சென்னை
ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.