Key Candidates Lose in Tamil Nadu Lok Sabha Election
17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நேற்று(மே.23) நடந்து முடிந்திருக்கிறது. ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் கணித்ததை விட எகிறி அடித்த பாஜக கூட்டணி, 350 தொகுதியில் வெற்றிப் பெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கிறது. வரும் மே 30ம் தேதி பிரதமர் மோடி 2 முறையாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அனல் வீசுவதில் கோடை வெயிலுடன் சரமாரியாக போட்டியிட்டது மக்களவை தேர்தல் களம். இறுதியில், திமுக 38 எம்.பி.க்களை அள்ளிக் கொண்டு போக, அதிமுக ஒரேயொரு எம்.பி.யை மட்டும் தங்கள் முன் நிறுத்தியிருக்கிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.