Lok Sabha Election 2019 Exit Poll India : நேற்று வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் மோடிக்கும், பாஜகவின் ஆட்சிக்கும் ஆதரவாக இருப்பதை நாம் பார்த்தோம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் மக்கள் மத்தியிலும் கட்சிகளின் மத்தியிலும் ஒரு சலசலப்பினை உருவாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள 143 தொகுதிகளில் பெரும் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போது வரை வெளியாகியுள்ள இந்த முடிவுகள், தேர்தல் முடிவுகளுக்கு முற்றும் முரணாகவும் இருக்கலாம் என்பது வரலாற்று உண்மை என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.
இந்தி மொழி மாநிலங்கள் மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவில் கர்நாடகாவில் பாஜகவுக்கு அதிக பெரும்பான்மை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் அமைந்திருக்கும் மாநில ஆட்சியில் மக்களுக்கு திருப்தி இல்லையா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இது போன்ற முடிவுகள் தமிழகம், ஆந்திரா போன்ற மாநில முடிவுகளிலும் எதிரொலிக்கின்றது.
2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு விகிதம் ஒரு பார்வை
பாஜக - 282 (31.04)
காங்கிரஸ் - 44 - 19.27
அதிமுக - 37
திரிணாமுல் காங்கிரஸ் - 34
2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு விகிதம்
காங்கிரஸ் 206 - 29.84
பாஜக - 116 - 18.79
சமாஜ்வாடி - 23
சமாஜ்வாடி - 21
Lok Sabha Election 2019 Exit Poll முடிவுகள்
ரிபப்ள்க் சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள்
பாஜக - 287
காங்கிரஸ் - 128
மற்றவை - 127
ரிபப்ளிக் பாரத் ஜன் கீ பாத்
பாஜக - 305
காங்கிரஸ் - 124
மற்றவை - 113
நியூஸ் நேஷன்
பாஜக - 282 முதல் 290
காங்கிரஸ் - 118 - 126
மற்றவை - 130 - 138
டைம்ஸ் நவ் வி.எம்.ஆர்
பாஜக - 306
காங்கிரஸ் - 142
மற்றவை - 94
கருத்துக் கணிப்பு முடிவுகள் தொடர்பான லைவ் செய்திகளை படிக்க
என்.டி.டி.வி வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பு முடிவுகள்
பாஜக - 300 இடங்கள்
காங்கிரஸ் - 127 இடங்கள்
மற்றவை - 115 இடங்கள்
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
மாநிலவாரியாக வெற்றியை உறுதி செய்யப்போவது யார் ?
டைம்ஸ் நவ்வின் கருத்துக் கணிப்பு
மேற்கு வங்கம்
பாஜக - 11
காங்கிரஸ் - 02
திரிணாமுல் காங்கிரஸ் - 28
பொதுவுடமைக் கட்சி - 1
தமிழகம்
பாஜக கூட்டணி - 9
காங்கிரஸ் கூட்டணி - 29
உத்திரப் பிரதேசம்
காங்கிரஸ் 2
பாஜக - 58
சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி - 20
தெலுங்கானா
பாஜக - 1
காங்கிரஸ் - 2
மற்றவை - 14
ஆந்திரா
பாஜக - 0
காங்கிரஸ் - 0
மற்றவை - 25
சண்டிகர் ஒரே தொகுதியை கொண்டுள்ள இம்மாநிலத்தில் பாஜக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பிஹார்
காங்கிரஸ் - 10
பாஜக - 30
மற்றவை - 0
ஹிமாச்சல் பிரதேசத்தில் 1 தொகுதியை காங்கிரஸ் கட்சியும், மூன்று தொகுதிகளை பாஜகவும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது.
பஞ்சாப்
காங்கிரஸ் கட்சி 10
பாஜக : 3
மற்றவை - 0
ஜார்கண்ட்
காங்கிரஸ் - 6
பாஜக - 08
மத்தியப் பிரதேசம்
காங்கிரஸ் - 05
பாஜக - 24
ஹரியானா
பாஜக 8
காங்கிரஸ் 2
ஒடிசா
பாஜக 12 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், மற்ற கட்சி 8 இடங்களையும் கைப்பற்றும்.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின் படி, பாஜக 262 தொகுதிகள், காங்கிரஸ் 78 தொகுதிகள், திரிணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகள், திமுக 23 தொகுதிகள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 18 தொகுதிகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 13 இடங்கள், அதிமுக 7 இடங்கள், ஜனதா தளம் - 14, மகாத்பந்தன் கூட்டணி 20 தொகுதிகள், சிவசேனா 16 தொகுதிகள், தெலுங்கு தேசம் 7 தொகுதிகள், மதசார்பற்ற ஜனதா தளம் 1 தொகுதியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது.
NDTV கருத்துக் கணிப்புகள்
கேரளா : காங்கிரஸ் 13, இடதுசாரி - 4, பாஜக - 1
கர்நாடகா : பாஜக - 19 காங்கிரஸ் - 9
குஜராத் : பாஜக - 23, காங்கிரஸ் - 3
ராஜஸ்தான் : பாஜக கூட்டணி - 22 காங்கிரஸ் 3
ஆந்திரா : தெலுங்கு தேசம் - 9, YSRC - 16
ஒடிசா : BJD - 11, பாஜக - 9 , காங்கிரஸ் - 1
தெலுங்கானா : தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி 12, காங்கிரஸ் - 2, பாஜக - 1
பஞ்சாப் - பாஜக கூட்டணி - 3, காங்கிரஸ் - 9
அஸ்ஸாம் : பாஜக கூட்டணி - 9, காங்கிரஸ் - 4, மற்றவை - 1
மேற்கு வங்கம் : திரிணாமுல் காங்கிரஸ் - 24, காங்கிரஸ் - 2, பாஜக 14
பிகார் : பாஜக கூட்டணி - 31 இடங்கள், காங்கிரஸ் - 9
என்று நீள்கிறது இந்த பட்டியல்... மொத்தமாக பாஜக 306 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 124 இடங்களிலும், மற்ற கட்சிகள் 112 இடங்களிலும் வெற்றி பெறும் என தன்னுடைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டது என்.டி.டி.வி.
கருத்துக் கணிப்புகள் குறித்து பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என்று மம்தா பானர்ஜீ கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாஜகவிற்கு எதிராக ஒன்றாக நிற்போம் என்றும் அறிவித்துள்ளார் அவர். எது எப்படியோ 23ம் தேதி மாலைக்குள் தெரிந்துவிடும் அடுத்த 5 ஆண்டுகள் யாருடைய ஆட்சியில் நம்முடைய நாடு செல்லப் போகிறது என்று!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.