Lok Sabha, TN Assembly Election 2019 Live Updates: தமிழகத்தில் தேர்தல் திருவிழா தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் என முழுவதும் வெளியிடப்பட்டுவிட்டது. கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவு காரணமாக பாஜக தனது வேட்பாளர்கள் அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை பாஜகவிடம் இருந்து அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதேபோல், காங்கிரசும் தங்களது லிஸ்டை வெளியிட தயாராகிவிட்டது.
இவ்விரு தேசியக் கட்சிகளைத் தவிர்த்து, மாநில கட்சிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாளை (மார்ச்.20) தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறது. அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார். அதிமுக தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.
தமிழக தேர்தல் களத்தின் இன்றைய ஒவ்வொரு நிகழ்வுகளின் லைவ் அப்டேட்ஸ்களையும் ஐஇ தமிழில் நீங்கள் உடனுக்குடன் அறியலாம்.
Election 2019 Tamilnadu Live Updates
03:10 PM - பாஜக, கம்யூனிஸ்ட் தவிர பிற அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
02:30 PM - ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
01:30 PM - அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன ?
01:00 PM - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான மார்க்கண்டேயன் கட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து வெளியேறி இருக்கிறார்.
12:45 PM - மதிமுக போட்டியிடும் சின்னம் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
12:00 PM - திமுக தேர்தல் அறிக்கை முற்றிலும் அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
11:50 AM - அதிமுக தேர்தல் அறிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
11:30 AM - வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்.
மாணவர்களின் கல்விக்கடனை ரத்துசெய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
ஜாதி சான்றிதலில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். #Admkmanifesto
— AIADMK (@AIADMKOfficial) 19 March 2019
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
11:18 AM - அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கழக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு வருகிறார்.
11:05 AM - நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:00 AM - திமுக தேர்தல் அறிக்கை
சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்
வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை
கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தப்படும்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்
பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்
கார்ப்பரேட் நிறுவனத்தில் குறைந்தபட்சமாக ரூ.10,000 ஊதியத்தில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
10:45 AM - திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். அதில் சில சிறப்பம்சங்கள் இதோ,
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்.
வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்
சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்.
கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
10:35 AM - அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்
10:28 AM - 'சவுகிதார்' ஆனார் தமிழிசை சவுந்தரராஜன்! ட்விட்டரில் பெயர் மாற்றம்!
10:10 AM - இன்னும் சிறிது நேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
09:55 AM - அரவக்குறிச்சி சுங்கச்சாவடியில் 5.63 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. மதுரையிலிருந்து சேலத்தில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை கொண்டுச் சென்ற போது பறிமுதல்.
09:15 AM - தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
09:05 AM - திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "திமுக தேர்தல் அறிக்கை ஹீரோவைப் போலவும், ஹீரோயினைப் போலவும் இருக்கும். ஆனால், வில்லனைப் போல இருக்காது" என்றார்.
08:30 AM - தி.மு.க - பா.ம.க நேரடியாக மோதும் தொகுதிகள் இவை தான்! - படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.