election results 2019 : பல்வேறு கலாச்சாரத்தை உள்ளடக்கிய மாநிலம் தமிழ்நாடு. மேற்கில் கேரளாவையும், வடக்கில் ஆந்திராவையும், வடமேற்கில் கர்நாடகாவையும் எல்லைகளாக கொண்ட மாநிலம் இது. இங்கு தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களாகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதிமுகவுடன் பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. அதேபோல், எதிரணியில் திமுகவுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இவர்களை தவிர இரண்டாக பிரிந்த அதிமுகவில் இருந்து தற்போது அமமுக அணி உருவாகியுள்ளது.
அமமுக-வின் கட்சி தலைவராக டிடிவி தினரகன தலைமை தாங்கியுள்ளார். அதே போல் திரையுலகில் சாதனைப்புரிந்து வந்த கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தற்போது லோக்சபா தேர்தலை எதிர்க் கொண்டுள்ளார். கூடவே சீமானின் நாம் தமிழர் கட்சியும் லோக்சபா தேர்தலை தனித்து சந்தித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்று முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை (மே 23) வெளியாகின்றன. தமிழகத்தை பொருத்தவரையில் ஆட்சி மாற்றத்திற்கு இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் காரணமாக அமையும் என பேசப்பட்டு வருகின்றன.
நாளை வெளியாகும் 17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்... முக்கியத்துவம் பெரும் தொகுதிகள் எவை?
சில குறிப்பிட்ட தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வேட்பாளர்கள் மட்டுமில்லை வாக்காளர்களாகிய மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்? அவை எந்தெந்த தொகுதிகள்? என்ற விவரத்தை பார்க்கலாம் வாருங்கள்.
1. தர்மபுரி :
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி தான் இங்கு வேட்பாளர். இவருக்கு கடும் போட்டியாக தி.மு.க., சார்பில், டாக்டர் செந்தில் களம் கண்டுள்ளார். இரு டாக்டர்களுக்கு இடையே ஆன போட்டி. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் இந்த தொகுதியின் வெற்றி கணிப்பு இழுப்பறியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தர்மபுரியில் தேர்தல் நடைப்பெற்ற பின்பும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடந்ததாக திமுக சார்பில் மறுவாக்குப்பதிவு கோரப்பட்டது. அதன்படி தர்மபுரியில் 8 வாக்குச்சாவடியில் மே 19 ஆம் மறுவாக்குப்பதிவும் நடைப்பெற்றது. இத்தனை பதற்றமான சூழலை ஏற்படுத்திய தர்மபுரி தொகுயின் தேர்தல் முடிவு அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
2. கன்னியாகுமரி :
சென்ற முறை பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ் சார்பில், வசந்தகுமாரரும் போட்டியிட்டனர்.இந்நிலையில் இம்முறையும் இவர்கள் இருவருமே களம் காண்கின்றனர். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பொன்னர் வெற்றி பெற்றார்.
அதிக ஓட்டுகள் பெற்று, வசந்தகுமார் இரண்டாமிடம் பெற்றார். இந்த முறை இருவருக்கும் கூட்டணி கட்சிகள் கைக்கொடுத்துள்ளன. அதனால் இந்த முறை வெற்றி பெற போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் அதே நேரம் காங்கிரஸ் போட்டியாளர் வசந்தக்குமார் கடுமையான போட்டியை தர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. ஸ்ரீபெரும்புதுார் :
திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு, களம் இறக்கப்பட்டார். இவருக்கு போட்டியாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவை சேர்ந்த வைத்தியலிங்கம் களம் இறக்கப்பட்டார். இந்த தொகுதியில் இருமுனை போட்டி மட்டுமே அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் முடிவிலும் இருமுனைப்போட்டியில் திமுக- அதிமுக தொடர்ந்து இழுபறி சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
2019 மக்களவை தேர்தல் - கவனம் ஈர்த்த மோடி - திமுக மோதல்
4. மத்திய சென்னை:
மத்திய சென்னையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாமக சார்பில் சாம் பால் களம் இறக்கப்பட்டுள்ளார். அதே போல் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசர், அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ சார்பில் தெஹ்லான் பாகவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே மத்திய சென்னை தொகுதி 4 முனை போட்டியை சந்தித்தது.
மத்திய சென்னை தொகுதியில் கடந்த கால தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இம்முறை இந்ததொகுதியின் தேர்தல் முடிவுகளை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். கருத்துக்கணிப்பின் முடிவில் திமுக-வுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
5. தேனி:
3 முனைப்போட்டில் தேனியில் கடுமையாக இருந்தது. இத்தனை வருடம் கட்சியில் இருந்தும் முதன்முறையாக தனது மகனை தேர்தலில் களம் இறக்கியுள்ளார் துணை முதல்வர் பன்னீர் செல்வம். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வேட்பாளர் என்று தெரிந்ததும், சற்றும் யோசிக்காமல் அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்செல்வனை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் டிடிவி.
இவர்களுக்கு கடுமையான போட்டியாக காங்கிரஸ் சார்பில், முன்னாள் தலைவர் இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தான் எல்லோரைய எதிர்பார்ப்பும். குறிப்பாக ஓபிஎஸ் மகன் இந்த தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு பின்பு சந்தித்த சர்ச்சைகள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே தேனி மக்களவை தொகுதி அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
6.சிவகங்கை :
பாஜக vs காங்கிரஸ் தான் ஹைலைட் போட்டி. காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தான் சிவகங்கையில் போட்டியிட்டுள்ளார்.
அவருக்கு போட்டியாக பாஜக சார்பில் , அக்கட்சி தேசிய செயலாளர், எச்.ராஜா நிறுத்தப்பட்டார்.இவர்கள் இருவருக்கும் இடையிலான கடுமையான போட்டி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கருத்துக்கைப்பு முடிவில் கார்த்திக் சிதம்பரம் . எச் ராஜாவை முந்தியாகவும் கூறப்பட்டுள்ளது.
7. தூக்குக்குடி:
இரண்டு அரசியல் தலைவர்களின் பெண் வாரிசுகளும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதி இருக்கின்றனர். கனிமொழி முதன் முறையாக போட்டியிடும் லோக்சபா தேர்தல் இது. இவருக்கு கடுமையான போட்டியாக அதுவும் அவருக்கு நிகர் பிரபலமான பெண் அரசியல் தலைவர் தான் நிறுத்த வேண்டும் என்பதில் நிலையாக இருந்த பாஜக, தமிழிசை சவுந்தரஜானை வேட்பாளராக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி வேட்பாளர்கள் பெயர் வெளியானதில் இருந்து பொதுமக்கள் உட்பட அரசியல் ஆலோசர்கள் பலரின் கவனமும் தொடர்ந்து தூத்துக்குடி திசையில் திரும்பி இருந்தது. பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் விமர்சனங்கள் என தேர்தலுக்கு பின்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் தூத்துக்குடியில் வெற்றி யாருக்கு என்பது அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.
8. சிதம்பரம் :
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்த தொகுதியில் தொடர்ந்து இழுப்பறி நீடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் இங்கு களம் இறங்கினார். அவருக்கு போட்டியாக அதிமுக சார்பில் சந்திரசேகரன் வேட்பாளாராக இறக்கப்பட்டார். இவர்கள் இருவருக்குமான போட்டி சிதம்பரத்தில் பலமாக உள்ளது.
இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.