அம்மாவிடம் வாங்கிய கடன் மட்டும் ரூ 83 லட்சமாம்: ஓபிஎஸ் மகன் சொத்துக் கணக்கு இதுதான்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டவை

P Ravindranath Kumar Panneerselvam Assets declared:  ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவைத் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கையும் சமர்ப்பித்தார். அதன் விவரம் இங்கே தரப்படுகிறது.

தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். நேற்று (மார்ச் 22) அவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Read More: திடீர் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: தேனியில் யார் ‘கை’ ஓங்கும்?

வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களது அசையும் சொத்துக்கள், அசையா சொத்துகள் ஆகியவற்றின் கணக்குகள், குற்ற வழக்குகள் ஆகியவை தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டு. அந்த வகையில் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனது சொத்துக் கணக்கை சமர்ப்பித்தார்.

O.Panneerselvam Son P Ravindranath Kumar Assets declared- தேனி பாராளுமன்றத் தொகுதி

O.Panneerselvam Son P Ravindranath Kumar Assets declared: ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் சொத்து விவரங்கள் வருமாறு:

தனது கையில் ரொக்கம் 82 ஆயிரத்து714 ரூபாய், தனது மனைவி கையில் 62 ஆயிரத்து 450 ரூபாய், சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 063 ரூபாய், பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாய், தனது மனைவிக்கு பெரியகுளம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 306 ரூபாய்,

Read More: ஓ.பி.எஸ். மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன்: அமமுக 2-வது பட்டியல் அறிவிப்பு

தனது மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 131 ரூபாய், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 067 ரூபாய், ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாய், விஜயானந்த் டெவலப்பர்ஸ் பி.லிட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள் (Equity Share), பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெட்லைஃப் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய்,

தன்னிடம் 6 லட்சத்து 35 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் i10 கார், 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டொயோட்டோ ஃபார்சூனர் கார், 120 கிராம் தங்கம், 1.1 கிலோ வெள்ளி, மனைவியிடம் 760 கிராம் தங்கம், 4.75 கிலோ வெள்ளி, 10 கேரட் வைரம், மகன் ஜெய்தீபிடம் 120 கிராம் தங்கம், மகள் ஜெயஸ்ரீயிடம் 300 கிராம் தங்கம், மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரவீந்திரநாத்குமாரிடம் 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் மதிப்பிலும், அவரது மனைவியிடம் 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய் மதிப்பிலும், மகன் ஜெய்தீப்பிடம் 5 லட்சத்து 23 ஆயிரத்து 131 ரூபாய் மதிப்பிலும், மகள் ஜெயஸ்ரீயிடம் 10 லட்சத்து 61ஆயிரத்து 067 ரூபாய் மதிப்பிலும், மகன் ஆதித்யாவிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் அசையும் சொத்துகள் இருப்பதாக கூறியிருக்கிறார்.

விவசாய நிலமாக ரவீந்திரநாத் குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் 31.37 ஏக்கர் நிலம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் 2011-ம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் ரூ15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும், தற்போது அதன் மதிப்பு (தோராயமாக) 1 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 303 ரூபாய் எனவும், தனக்கு பூர்வீக சொத்துகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்தவேண்டிய தொகை 3 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரத்து 079 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதில், தனது தம்பி ஜெயபிரதீப்பிற்கு 33 லட்சத்து 03 ஆயிரத்து 136 ரூபாயும், தனது தாய் விஜயலெட்சுமிக்கு 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் கடன் செலுத்தவேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டவை ஆகும்.

 

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close