Assembly By Election 2019 Result in Tamil Nadu: அமமுக ஆதரவு மற்றும் எம்.எல்.ஏக்களின் மறைவுகள் காரணமாக தமிழகத்தில் காலியான 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் முறையே 18, 4 என நடந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக ஆட்சியினை மாற்றும் சக்தியாக அமையலாம் என்று பலதரப்பில் இருந்தும் பேசி வருகின்றனர். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக ஆட்சியை ஸ்திரப்படுத்துமா இல்லை ஆட்சி மாற்றம் நடைபெறுமா என்பதை இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Tamil Nadu By Election 2019 Results: TN Assembly By Election Result
நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாகும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இதோ, உங்களின் பார்வைக்கு.
மேலும் படிக்க : இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ
சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுடன் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன. அதற்கான வாக்கு எண்ணிக்கைகளும் முழு வீச்சில் 8 மணிக்கு ஆரம்பமானது.
மேலும் படிக்க : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019
2019 தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. கர்நாடகா மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக முன்னணி பெற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
வட சென்னை வாக்கு இயந்திரத்தை பெரம்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக மாற்றி எடுத்து வந்ததால் பரபரப்பு. பெரம்பூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் உள்ளிட்டோர் விசாரணை
22 தொகுதிகளில் கிட்டத்தட்ட சரிபாதி தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெறுவதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சியை அதிமுக தக்க வைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நீங்கலாக அதிமுக மெஜாரிட்டிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போதைய சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் இனி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்கக்கூடும்.
அதிமுக வேட்பாளர் - ஏ. கோவிந்தசாமி 5251 வாக்குகளைப் பெற்றுள்ளார்
திமுக வேட்பாளர் ஆ. மணி - 3346 வாக்குகள் பெற்றுள்ளார்
அமமுக டி.கே.ராஜேந்திரன் 840 - வாக்குகள்
மக்கள் நீதி மய்யம் - நல்லதம் 110 வாக்குகள்
நாம் தமிழர் கட்சியின் கே. சதீஷ் - 199 வாக்குகள்
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் கருத்துகள், ட்வீட்கள், மற்றும் இதர செய்திகளை பார்க்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் : D Day Social Media Reactions
இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் 22 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாக உள்ளது. இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் உடனுக்குடன் நீங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்
தமிழ்நாட்டில் உள்ள 38 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கட்சிக் கொடியை காட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா, பென்சில், நோட்டு புத்தகம், 17சி படிவம் ஆகியவற்றை கொண்டு செல்லலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights