‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை!

இத்தனைக்கும் சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஓட்டுகளை அமமுக பிரித்தும் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை

By: Updated: May 25, 2019, 3:00:05 PM

அருண் ஜனார்த்தனன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக டிடிவி தினகரனும், கமல்ஹாசனும் ஓட்டுகளை அறுவடை செய்தாலும், அவர்களால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை.

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரை, மக்களவைத் தேர்தலில் 5.27 சதவிகித வாக்குகளையும், சட்டமன்ற இடைத் தேர்தலில் 7 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில் கிராமப்புறங்களில் அமமுக கணிசமான வாக்குகளை குவித்திருக்கிறது. அதேசமயம், நகரப்புறங்களில் அமமுக பெரும்பாலான இடங்களில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க – சொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு!!!

மற்றொரு புறம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் நகர்ப் பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கின்றன. 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் படிக்க – 16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி

கிராமப்புறங்களில் அமமுக பெற்ற வாக்கு சதவிகிதம்

ராமநாதபுரம் – 13.30%

தேனி – 11.8%

சிவகங்கை – 11.3%

கமல்ஹாசனின் கட்சி தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை தொகுதிகளில் 10 – 12% வாக்குகளையும், கோவையில் 11.60% வாக்குகளையும், ஸ்ரீபெரும்புதூரில் 9.50& வாக்குகளையும் பெற்றுள்ளன.

தினகரனை பொறுத்தவரை அவரது அமமுக கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, வி.கே. சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்ற பிறகு, மன்னார்குடி குடும்பத்தின் மீதிருந்த எதிர் மனநிலையையும் மீறி 2017ல் நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பெரும் வெற்றிப் பெற்றார். திமுகவே அங்கு டெபாசிட் இழந்தது. ஆனால், அவரது அமமுக கட்சி இதுவரை பெற்ற ஒரே வெற்றியாக அது மட்டுமே உள்ளது. நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் கூட அவரது கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை.

மேலும் படிக்க – தமிழக அரசியல் நிலவரம் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதுகுறித்து தினகரனுக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாங்கள் வெற்றிப் பெறவில்லை என்றாலும் கூட, இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவிகிதம் பெறுவோம் என்றே நினைத்திருந்தோம். நாங்கள் 10 சதவிகிதத்தை கூட நெருங்வில்லை” என்றார்.

அதுமட்டுமின்றி, அமமுகவின் இரு நட்சத்திர வேட்பாளர்களாக தேனியில் களமிறங்கிய தங்க தமிழ் செல்வனும் தர்மபுரியில் களமிறங்கிய பழனியப்பனும் வெற்றியை தவறவிட்டிருக்கின்றனர். இத்தனைக்கும் சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக ஓட்டுகளை அமமுக பிரித்தும் அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை.

அமமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கட்சியில் சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்களை முன் வைக்கிறார். அவர் கூறுகையில், “அமமுகவுக்கு வாக்களித்தால் அது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சாதகமாக அமைந்து நிறைய இடங்களை வெல்ல காரணமாகிவிடும். அதேசமயம், திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு எதிராக அமையும் என்றும், அமமுகவால் இந்த நிலையில் டெல்லியில் எதுவும் பெரிதாக செய்து விட முடியாது என்றும் மக்கள் நினைத்திருக்கின்றனர்.

இது தவிர, கட்சி சின்னம் கூட எங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிட்டது. ஆர்.கே.நகரில் மட்டும் நடந்த இடைத் தேர்தலில், எங்களால் குக்கர் சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. ஆனால், இம்முறை எங்களுக்கு சின்னம் தராமல் இழுத்தடித்து, பரிசுப் பெட்டகத்தை ஒதுக்கிய போதே, மாநிலம் முழுவதும் இந்த சின்னத்தை கொண்டுச் சேர்ப்பது சவாலான காரியம் என்பதை உணர்ந்தோம்” என்றார்.

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu election results dhinakaran gets rural votes and kamal haasan urban

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X