வயநாட்டில் ராகுல் காந்தி: உற்சாக வரவேற்புக்கு இடையே வேட்புமனுத் தாக்கல்

18ம் தேதி தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

By: Apr 4, 2019, 5:49:27 PM

General Election 2019 Live Updates : செவ்வாய் கிழமையன்று டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்த தேர்தல் ஆணையர்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுடன் (7 தேசிய கட்சிகள் + 3 மாநில கட்சிகள்) ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நேற்று அந்த 10 கட்சிகளின் பிரதிநிதிகள் அந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பின்பு நேற்று மதியம் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இரண்டாம் நாளாக இன்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையர்கள் சுஷீல் சந்திரா மற்றும் அசோக் லவாசா ஆகியோர் இன்று தலைமை செயலர், டிஜிபி, வருமான வரி மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க : மோடி திரைப்படம் நாளை வெளியாகிறது 

Live Blog
தேர்தல் ஆணையர்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகளுடன் (7 தேசிய கட்சிகள் + 3 மாநில கட்சிகள்) ஆலோசனையில் ஈடுபட்டனர்
14:27 (IST)04 Apr 2019
பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடி

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்குச்சாவடி பெண்களே நிர்வகிக்கும் வகையில் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா அறிவித்துள்ளார்.  மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வேறு ஆவணங்களை சமர்பித்து வாக்களிக்கலாம் என்றும், நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்  ஆணையர் அறிவிப்பு. 

14:23 (IST)04 Apr 2019
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1500 நிதி உதவி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1500 நிதி உதவி என்ற தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வண்ணம் உள்ளது என்றும் அதனால் அதனை விசாரிக்க வேண்டும் போடப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

12:03 (IST)04 Apr 2019
துணை முதல்வரின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்யும் வாகனம் ஊட்டி - கூடலூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் நடுவட்டம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

11:57 (IST)04 Apr 2019
பெரிய வியாழன் என்று தேர்தல் நடத்த வேண்டாம் - உச்ச நீதிமன்றம் திங்களன்று விசாரணை

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடத்த வேண்டாம் என்று கிறுத்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய வியாழன் அன்று தேர்தல் நடைபெறுவதால் பாதிப்புகள் ஏற்படலாம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கினை திங்கள் கிழமை விசாரணை செய்ய உள்ளது உச்ச நீதிமன்றம். 

11:49 (IST)04 Apr 2019
வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. அவருடன் அவருடைய சகோதரி ப்ரியங்கா காந்தி மற்றும் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அங்கு உள்ளனர். உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமேதியில் இதுநாள் வரையில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி தற்போது வயநாட்டில் போட்டியிட உள்ளார். 

11:31 (IST)04 Apr 2019
வயநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற ராகுல் காந்தி

கோழிக்கோட்டில் இருந்து இன்று வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. அவரை காண்பதற்காகவும், வரவேற்கவும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் ஒன்று கூடியுள்ளனர். 

11:19 (IST)04 Apr 2019
பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் மனு மீது திங்களன்று விசாரணை

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது உச்ச நீதிமன்றம். மனுவின் மீதான விசாரணை திங்கள் கிழமை நடைபெறும் என்று அறிவிப்பு. இந்நிலையில் நாளை இந்த திரைப்படம் உலகெங்கும் வெளியிடப்பட உள்ளது. மொத்தம் 23 மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. விவேக் ஓப்ராய் நடிப்பில், ஓமங் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம். 

மேலும் படிக்க : மோடி படத்திற்கு தடையில்லை ஆனால் நமோ டிவி குறித்து விளக்கம் வேண்டும் - தேர்தல் ஆணையம்

11:14 (IST)04 Apr 2019
இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

கேரளாவில் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, வயநாடு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். நேற்றிரவு அவர் தன் தங்கை பிரியங்கா காந்தியுடன் கோழிக்கோடை வந்தடைந்தார்.  அவருக்கு எதிராக சோலார் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா எஸ். நாயர், சுயேட்சையாக போட்டியிடுகிறார். 

மேலும் படிக்க : வயநாடு தொகுதியை இரண்டாவது தொகுதியாக ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன ?

கேரளாவில் 23ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இன்று அவர் தன்னுடைய வேட்புமனுவினை தாக்கல் செய்கிறார்.

Web Title:Tamil nadu general election 2019 live updates ec meeting continues for the 2nd day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X