2.O Movie Theatre Collection, Rajinikanth's 2.O Movie, ரஜினிகாந்தின் 2.0, அக்ஷய்குமார், 2.0 தியேட்டர் வசூல்
2.0 teaser : இயக்குநர் சங்கர் உருவாக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள 2.0 படம் டீசர் வெளியானது.
Advertisment
2.0 teaser : நேருக்கு நேர் மோதும் ரஜினி - அக்ஷய்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இருவரும் இணைந்து முதல் முறையாக 2.0 படத்தில் நடித்துள்ளனர். அக்ஷய் குமார் நடிக்கும் முதல் தமிழ் படம் இது.
லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் கொண்டு வெளியாகியாக தயாராக இருக்கும் 2.0 படம் டீசர் இன்று வெளியிடப்பட்டது.
2010ம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தின் 2வது பாகமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக படத்தில் சிட்டி ரோபோ, அக்ஷய் குமார் ஆகியோரின் மேக் அப் சிறப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் ஒருவர் தூக்கில் தொங்குகிறார். அதை சுற்றி காகங்கள் பறக்கிறது. இதற்கிடையே பொதுமக்களிடம் இருக்கும் செல்போன்கள் அனைத்தும் பறிபோகிறது. இந்த செல்போன்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரிய காகமாக மாறுகிறது.
இந்த பெரிய காகத்தை வில்லை அக்ஷய் குமார் உருவாக்க உலகை அழிக்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறார். இதனை எதிர்த்து, சிட்டியை களமிறக்க அறிவுறுத்துகிறார் டாக்டர். வசீகரன். இரண்டு இயந்திர மனிதர்களுக்கு இடையே நடக்கும் போரில், சிட்டி எப்படி வெற்றிபெறுகிறார் என்பதே கதை.
இந்த படத்திற்காக 2 வருடங்களாக சுமார் 3000 பேர் வேலை பார்த்துள்ளனர். இப்படத்தை எந்திரன் பார்ட் 2 என்று மக்கள் சொல்லி வந்தாலும், இயக்குநர் சங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த கதை என்று கூறியுள்ளார்.
2.0 திரைப்படத்திற்காக சுமார் 540 ரூபாய் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. முதலில் இப்படம் 350 ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என்று படக்குழுவினர் கூறியிருந்தாலும், நாளடைவில் இதனை படைக்க செலவுகள் அதிகமானது. இப்படம் தான் இந்தியாவிலேயே 2வது அதிகமான பட்ஜெட்டில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.