2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்... இதுவரை ரூ 30 கோடி

Rajinikanth's 2.O Movie Collection: இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ18 கோடியே சாதனையாக பார்க்கப்பட்டது.

Rajinikanth's 2.O Movie Collection: இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ18 கோடியே சாதனையாக பார்க்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth's 2.O Movie Collection, 2.0 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

Rajinikanth's 2.O Movie Collection, 2.0 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

Rajinikanth's 2.O Movie Box Office Collection in Chennai: ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் வசூலில் புதிய மைல் கல்லை எட்டுகிறது. வெளி மாநிலங்கள், ஓவர்சீஸ் மற்றும் தமிழக தியேட்டர்களில் 3-வது வாரமாக வசூல் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Advertisment

Read More: 2.O Box Office Collection: இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி

சென்னை மாநகரில் மட்டும் 3-வது வாரமாக சுமார் 80 ஸ்கிரீன்களில் 2.0 ஓடிக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இரு தினங்களுக்கு முன்பு வெளியான படங்களுக்கான இருக்கைகள்கூட பல தியேட்டர்களில் காலியாக கிடந்தன. 2.0 ஹவுஸ் ஃபுல்! வேலை நாட்களிலும்கூட தியேட்டர்களில் கூட்டத்தை பார்க்க முடிகிறது.

Read More: ரூ 1000 கோடியை தொடுகிறதா? மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு

Advertisment
Advertisements

சென்னை மாநகரில் மட்டுமே இதுவரை சுமார் ரூ 30 கோடியை 2.0 வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள். தமிழ் சினிமா வட்டாரத்தில் இது புதிய சாதனை! இதற்கு முன்பு கபாலி 3-வது வாரத்தில் சென்னையில் வசூல் செய்த ரூ18 கோடியே சாதனையாக பார்க்கப்பட்டது.

சென்னை மாநகரில் விடுமுறை தினம் அல்லாத சாதாரண நாளில் வெளியாகி, அதுவும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் சென்னையில் 80 ஸ்கிரீன்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது திரையுலகில் பலருக்கும் ஆச்சர்யம்!

Rajinikanth's 2.O Movie Chennai Theatres Collection: சென்னையில் 2.0 வசூல் ரூ 40 கோடியை எட்டுமா?

இன்னும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தினங்கள் வர இருப்பதால் ஸ்கிரீன்களின் எண்ணிக்கை கூடும். வசூலும் கூடும் என்பதுதான் நிலை! வருகிற விடுமுறை தினங்களை கணக்கில் எடுத்தால், சென்னை மாநகர தியேட்டர் வசூல் மட்டுமே ரூ 40 கோடி என்கிற புதிய மைல் கல்லை உருவாக்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதர முன்ணனி தமிழ் நடிகர்களின் ஒட்டு மொத்த தமிழக வசூலில் இது எண்பது சதவிகிதம்! பாக்ஸ் ஆபீஸில் ரஜினிகாந்த்- ஷங்கர்-லைகா கூட்டணியின் இந்தச் சாதனையை இனி ரஜினியே உடைக்க முடியுமா? என்பது கேள்விக்குறிதான்!

திராவிட ஜீவா

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: