Aadai review : அமலா பாலின் ஆடை... இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் அந்த ஒரு சீன் தான்!

Amala Paul's Aadai Movie Review and Rating in Tamil: சீட்டு நுனிக்கு செல்ல கடைசி வரை அப்படி எதுவே சொல்லாமல் நம்மை...

Aadai movie reviee: அமலா பால் ஆடை இல்லாமல் நடித்து  தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ஆடை படத்தின் விமர்சனம் இதோ.

தனது முதல் படமான மேயாத மான் மூலம் கோலிவுட்டில் அனைவரின் கவனத்தையும் திருப்பிய இயக்குனர் ரத்தனகுமார் இயக்கத்தில் இப்படியொரு படமா? என்பது தான் படத்தை பார்த்த அனைவருக்கும் வந்த ஃபர்ஸ்ட் ஷாக்..முதல் படத்தில் காதல், அண்ணன் – தங்கை செண்டிமேட், நட்பு என லோக்கலாக இறங்கி அடித்த இயக்குனர் இந்த முறை கையில் எடுத்த சாட்டை தான் பெண்ணியம்.

தனியார் தொலைக்காட்சியில் வேலை புரியும் அமலா பால் தந்தையை இழந்தவர், தாயின் அன்பில் கொஞ்சம் சுதந்திரமாக வளர்ந்த அவருக்கு ரம்யா உட்பட சில பல ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். குடிப்பது, பார்ட்டி செல்வது, பாய் ஃபரண்ட்டை பின்னால் அமர வைத்துக் கொண்டு ஊரை சுற்றுவது கும்பலாக சேர்ந்து ஏ ஜோக்குகளை சொல்லி  ரசிப்பது என பக்கா அட்ராசிட்டி செய்துக் கொண்டிருக்கிறார்.

Aadai Movie Review, Public Reactions!

முடியுமா? என்று யாராவது கேட்டால் போதும் பெட்டு கட்டி அதை முடித்து காட்டுபவர். இவரும், இவரின் நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஃப்ரன்ங் ஷோ செய்து வருகிறார்கள். டி.ஆர்பிக்காக எந்த லெவலுக்கும் செல்வார்கள் என்பது ரோட்டில்  இவர்கள் வேஷம் போடுவதிலேயே தெரிந்து விடும்.

ஒருநாள், இவர்கள் வேலை செய்யும் டிவி சேனல் கட்டிடம் வேறு இடத்திற்கு மாறுகிறது. அன்றே அமலா பாலின் பிறந்த நாளும் வருகிறது. தனது பிறந்த நாளை வித்யாசமாக கொண்டாட வேண்டும், என விரும்பும் அமலா பால் தனது நண்பர்களுடன் காலியாக இருக்கும் அதே பில்டிங்கில் இரவு தங்கி பார்ட்டி செய்கிறார்.

அப்போது குடி போதையில் அமலா பால், தனது நண்பர்களிடம் ஒருநாள் இரவு முழுவதும் தன்னால் ஆடை இல்லாமல் இந்த பில்டிங்கில் இருக்க முடியும் என சவால் விடுகிறார். காலை எழுந்து பார்த்தால் அவரின் உடம்பில்  ஆடை இல்லை. சுற்றி முற்றி பார்த்தால் யாரும் இல்லை. உடுத்தவும் ஆடையும் இல்லை.

இப்படி இருக்கும் நிலையில் அமலா பால் அந்த கட்டிடத்தில் இருந்து எப்படி தப்பித்தார்? அவரின் இந்த நிலைக்கு யார் காரணம்? ஆடை இல்லாமல் தனது மானத்தை அமலா பால் எப்படி காப்பாற்றிக் கொள்கிறா? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இரண்டாம் பாதி.

Amala Paul AAdai movie

aadai review

படம் தொடங்கும் போதே, இயக்குனர் மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த நங்கெலியின் கதையை கூறுகிறார். ஏதோ ஒரு கருத்தை படத்தில் சொல்ல போகிறார் என ரசிகர்க்ள் சீட்டு நுனிக்கு செல்ல, கடைசி வரை அப்படி எதுவுவே சொல்லாமல் நம்மை ஏமாற்றுகிறார் இயக்குனர்.

பெண்ணியம் பேசுவது எல்லாம் சரி, ஆனால் முதலில் பெண்ணியம் என்பதை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். ஆண்களுக்கு நிகராக குடிப்பதும், ஊர் சுற்றுவதும்தான் பெண்ணியம் என நினைக்காதீர்கள் என ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப்பில் வரும் அதே ஃபார்வேர்ட் மெசேஜ்களை கிளைமேக்ஸில் சொல்ல வருவது ரசிகர்களை அலுப்படைய செய்கிறது.

ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா?

படத்தில் அமலா பாலை பற்றி குறைச்சொல்ல ஒரு சீன் கூட இல்லை.படம் முழுக்க தனது பெஸ்டை விட பெஸ்டை தந்திருக்கிறார். நடிப்பில் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளி இருக்கிறார். படத்தில் நம்மை ஆச்சரியப்பட வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கண்ணன். ஆடை இல்லாமல் அமலா பாலை காட்டும் அனைத்து காட்சிகளிலும் ஆபாசம் துளியும் இல்லை. பார்க்கும் போது ரசிகர்களுக்கு எந்தவிதமான தவறான எண்ணத்தையும் தோன்றவிடாமல் மெனக்கெடுத்துள்ளார்.

இதை தவிர, சினிமாவில் இப்போது ஃபேஷனாகி போன அரசை கலாய்க்கும் வசனங்கள், மீடு பற்றி கிண்டல், ஆதார் அட்டை என கைதட்டல் பெற அனைத்து அம்சங்களையும் படத்தின் வசனத்தில் பொகுத்தியுள்ளார் இயக்குனர்.

Aadai Tamil Movie In TamilRockers

கிளைமேக்ஸில் அனன்யா பேசும் 20 நிமிட வசனம் பாராட்டுக்களை பெற்றாலும் இயக்குனர் என்னாதான்பா சொல்ல வருகிறார் என்ற கேள்வியை தான் முதலில் வர வைக்கிறது. மொத்தத்தில் அமலாபாலின் ஆடை வெறும் போஸ்டரால் வந்த சர்ச்சை மட்டுமே தவிர படத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லை.தாரளமாக சென்று பார்க்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close