Surya Crying at a Function : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா. நடிப்பு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு உதவுவது, கல்வி கற்க முடியாத சூழலில் இருக்கும் மாணவர்களை அகரம் அறக்கட்டளை மூலம் அடையாளம் கண்டு அவர்களை படிக்க வைப்பது உள்ளிட்ட சமூக பணிகளையும் செய்து வருகிறார்.
Advertisment
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கிராம புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. இதன் நிறுவனர் நடிகர் சூர்யா சிவக்குமார். அகரம் அறக்கட்டளைக்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல்வாதிகள் சார்பாகவும் நல்ல ஆதரவு உள்ளது.
இந்நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் “வித்தியாசம் தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக” என்று இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த வெளியீட்டு விழா சென்னை, தி நகரில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி மேடையில் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற காயத்ரி என்ற மாணவி பேசினார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்களையும், கோரமான சம்பவங்களையும், குடும்ப சூழ்நிலையும் குறித்து உருக்கமாக பேசினார்.
தஞ்சாவூரிலுள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தனது அப்பா கேன்சரால் இறந்து விட, அம்மா கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவதாக அவர் குறிப்பிட்டார். வீட்டின் வறுமையால் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்கிறேன் என பலமுறை சொல்லியும், தனது அம்மா ‘நான் பட்ட கஷ்டத்தை நீயும் பட வேணாம், நீ நல்லா படி’ என அறிவுறுத்தியதாகக் கூறினார். அகரம் மூலம் கல்வி பயின்ற தான், கல்லூரியில் மிகுந்த அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது கேரளாவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் காயத்ரி கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, அழுதவாறே காயத்ரியை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news