Actor Surya helped a poor student to study MBBS 10 years back : நடிகர் சூர்யா அகரம் என்ற தொண்டு அமைப்பின் மூலம் ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பலரும் இவரிடம் உதவி பெற்று நல்ல முறையில் படித்து வருகின்றனர். 10 வருடத்திற்கு முன்பு அகரம் அமைப்பின் சார்பில் ஏழை எளிய மாணவர்களை கண்டறிய தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
மெய்யாக்கிய மனிதர்கள் வாழ்க.!
???? pic.twitter.com/Su9fhm5JWE— டேனியப்பா (@minimeens) July 23, 2020
மேலும் படிக்க :‘அமேசான் பிரைம் டே’ ஆஃபர் வந்தாச்சு… வரிசைகட்டும் புது மாடல் ஸ்மார்ட்போன்கள்
அந்நிகழ்வில் பங்கேற்ற நந்த குமார் என்ற மாணவன் 12ம் வகுப்பு தேர்வில் 1160 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவத்திற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199 என்று கூறிய அவர், மருத்துவம் படிக்க பணம் இல்லை என்று கூறியிருந்தார். மிகவும் கஷ்டப்பட்டு தான் படித்து தான் இந்த மதிப்பெண் பெற்றேன் என்று கூறிய நந்தகுமார், கண்ணீர் விட்டபடியே, வீட்டில் மின்சாரம் கூட கிடையாது. அம்மா, அப்பா இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் உணவு தான் நான் சாப்பிட்ட சத்தான உணவு என்று வருத்ததுடன் கூறினார்.
மேலும் படிக்க : பிரமிப்பில் ஆழ்த்தும் சூர்யா-ஜோ…’காதல்’ என்ற மேஜிக் தான் இத்தனைக்கும் காரணம்!
நந்தகுமாருக்கு உதவுவதாக உத்தரவாதம் அளித்த நடிகர் சூர்யா, அவருக்கு சென்னை எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் படிக்க அகரம் மூலம் உதவி செய்தார். அவர் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை அனைத்து வகையான கட்டணங்களையும் சூர்யாவே ஏற்றுக் கொண்டார். மருத்துவம் படித்து முடித்த நந்தக்குமார் தற்போது கே.ஜி.பி. மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil