Rambha Family Picture : தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரம்பா. ரஜினி, கார்த்திக், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அப்போது தமிழ் சினிமாவில் இருந்த நடிகைகளுடன் ஒப்பிடுகையில், பக்கா ஸ்டைலிஷ் நடிகையாக திகழ்ந்தார் ரம்பா. மாடர்ன் உடைகளில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த அவர், டிரடிஷனல் உடைகளையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக ’தொடை அழகி’ என்ற பட்டத்தையும் ரசிகர்கள் ரம்பாவுக்குக் கொடுத்தனர்.
பின்னர் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில காலம் அவரிடமிருந்து விலகி இருந்தார். பிறகு பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொண்டு, மீண்டும் கணவருடன் இணைந்து வாழத் தொடங்கினார். அதன்பின் மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தாயானார் ரம்பா.
இந்நிலையில் தனது குடும்பப் படத்தை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். தோள் உயரத்திற்கு வளர்ந்த இரண்டு மகள்களும், கடைக்குட்டி மகனும் படு க்யூட்டாக இருக்கிறார்கள். மூன்று குழந்தைகளுக்கு பிறகும் ரம்பா அப்போது பார்த்தபடியே இன்னும் இளமையாக தெரிகிறார். குறிப்பாக அவருடைய ஹேர் கலர் அவரை ஸ்டைலிஷாக காட்டுகிறது. இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.