Advertisment

Adanga Maru Full Movie in Tamilrockers: சுடச்சுட ஆன் லைனில்... 'அடங்க மறு’த்த தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Adanga Maru Full Movie Online: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலேயே பலரும் இந்தப் புதுப்படங்களை டவுன் லோடு செய்யும் வாய்ப்பு இருப்பதால் திரையுலகம் பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilrockers Leaked Adanga Maru Movie: அடங்க மறு திரைப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Adanga Maru Movie: அடங்க மறு திரைப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Adanga Maru Full Movie Leaked in Tamilrockers: ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸான அடங்க மறு திரைப்படத்தையும் ஆன் லைனில் வெளியிட்டு ‘அடங்க மறு’த்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisment

பண்டிகை சீசனான இந்த தருணத்தில் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு நடிகரின் படத்தையும் சுடச்சுட ஆன் லைனில் திருட்டுத்தனமாக வெளியிட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

Adanga Maru Full Movie Download in Tamilrockers: அடங்க மறு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் Tamilrockers Leaked Adanga Maru Movie: அடங்க மறு திரைப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Adanga Maru Full Movie Download in Tamilrockers:  அடங்க மறு குழுவினர் அதிர்ச்சி

அந்த வகையில் தமிழ் பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்க மறு’ படமும் சிக்கியிருக்கிறது. ஜெயம் ரவி, போலீஸ் வேடத்தில் கலக்கியிருக்கும் படம் இது. ராஷிகன்னா ஜோடியாக நடித்திருக்கிறார். கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க : அடங்க மறு படம் எப்படி இருக்கு ?

அடங்க மறு திரைப்படம் டிசம்பர் 21-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ரிலீஸான சில மணி நேரத்திலேயே இந்தப் படத்தை ஆன் லைனில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசம் செய்திருக்கிறது. இதனால் அடங்க மறு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே டிசம்பர் 20-ம் தேதி ரிலீஸான சீதக்காதி, டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸான மாரி 2 ஆகிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. ஷாருக்கான் - அனுஷ்கா ஷர்மா நடிப்பில் டிசம்பர் 21-ம் தேதி வெளியான ‘ஸீரோ’ இந்திப் படம், அண்மையில் வெளியான ‘ஒடியன்’ ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Kanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலேயே பலரும் இந்தப் புதுப்படங்களை டவுன் லோடு செய்யும் வாய்ப்பு இருப்பதால் திரையுலகம் பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு தடை செய்தாலும் புதுபுது ஐ.டி.க்களில் அந்த இணையதளம் உயிர்ப் பெறுவதால் அதிகாரிகளும் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

 

Tamil Rockers Jeyam Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment