scorecardresearch

’வாழும் போது அமைதியை தேட ஏன் முயற்சிக்கக் கூடாது?’ – வைரலாகும் அமலா பால் படம்

“ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது?”

Amala Paul Hot Bikini Picture
Amala Paul Hot Bikini Picture

Amala Paul : நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவர். தற்போது ’அதோ அந்த பறவைப் போல’, ‘கடாவர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தி வலைத் தொடரில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தில் கையெழுத்திட்டார்.

வரும் சூரிய கிரகணத்தில் கொரோனாவுக்கு முடிவு: வயிற்றில் பால் வார்த்த சென்னை அணு விஞ்ஞானி!

கடந்த ஆண்டு ’ஆடை’ திரைப்படத்தின் மூலம் துணிச்சலான பாத்திரத்தில் நடித்திருந்த அமலா பால், அடுத்ததாக வன த்ரில்லர் படமான ‘அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தவிர சமூக ஊடகங்களில் தனது தனித்துவ பதிவுகளுக்கு பெயர் பெற்ற நடிகை அமலா இப்போது, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிகினி படத்தால் ரசிகர்களிடம் சூட்டை கிளப்பியுள்ளார்.

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

“ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்” என்ற கேப்ஷனுடன் மர வீட்டின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் மறைந்த பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங்கின் மறைவுக்கு பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். அமலா பால் நேரடியாக அவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த பதிவு அவரைப் பற்றியது தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Amala paul hot bikini instagram picture goes viral

Best of Express