scorecardresearch

Aadai Movie Review: சாத்தியமில்லாத ஒன்றை நிகழ்த்திக் காட்டிய அமலா பால்

Amala Paul’s Aadai Movie Review and Rating: முதன்மையான கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்திருக்கும் முதல் படம் இது.

Aadai Movie Review: சாத்தியமில்லாத ஒன்றை நிகழ்த்திக் காட்டிய அமலா பால்
ஆடை போஸ்டர்

Aadai Movie Review and Release Updates: நடிகை அமலா பால் நடிப்பில், நேற்று மாலை ‘ஆடை’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து சர்ச்சையைக் கிளப்பிய இந்தப் படம், டீசர், ட்ரைலர், ரிலீஸ் என அந்த சர்ச்சை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தப் படத்தை ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

ஆடை: ஆண் நடிகர்களை என்றாவது கேள்வி எழுப்பினோமா?

Aadai Movie Review and Ratings, Aadai Movie Release

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில் அமலா பாலுடன் இணைந்து, வி.ஜே.ரம்யா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நேற்று காலையில் ரிலீஸாக இருந்த இந்தப்படம் பைனான்ஸியல் பிரச்னைகளில் சிக்கியது. அதனால் காலை காட்சியும், அதோடு சேர்த்து பத்திரிக்கையாளர் காட்சியும் ரத்து செய்யப்பட்டது. மதியத்திற்குள் பிரச்னை முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மதிய காட்சிகள் ரத்தானது. இதைத் தொடர்ந்து தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்தார் அமலா பால். அதனால் நேற்று மாலை ‘ஆடை’ திரைப்படம் திரைக்கு வந்தது.

Aadai: பெண்ணே பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு? – அமலா பால்

Live Blog

Amala Paul’s Aadai Release Live Updates

அமலா பாலின் ’ஆடை’ ரிலீஸ் லைவ் அப்டேட்ஸ்


11:42 (IST)20 Jul 2019

சாத்தியமற்ற ஒன்றை செய்துக் காட்டியிருக்கிறார்கள்

ஆடை: ”தைரியமான மற்றும் அழகான படம். தெரிந்த ஒரு செய்தியை மிகவும் முதிர்ச்சியடைந்த, விறுவிறுப்பான முறையில் படமாக்கியிருக்கிறார்கள். அமலா பாலும் – ரத்ன குமாரும் சாத்தியமற்ற ஒன்றை செய்துக் காட்டியிருக்கிறார்கள்” என இந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. 

11:04 (IST)20 Jul 2019

ஒரு ஃப்ரேம் கூட மோசமானதாக இல்லை

”ஆடை திரைப்படம் கடினமான மற்றும் இடைவிடாத பொழுதுபோக்கு !!  ரத்னகுமார் நீங்கள் ஒரு ராக் ஸ்டார்!

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் ஒரு அசுரன்! கிட்டத்தட்ட சாத்தியமற்ற சிறப்பாக செய்திருக்கிறார். நிர்வாணத்தில் மனிதத்தை கண்டுபிடித்திருக்கிறீர்கள். ஒரு ஃப்ரேமை கூட மோசமாக உணரவில்லை” என இயக்குநர் அஸ்வின் சரவணன் ட்வீட்டியுள்ளார். 

10:49 (IST)20 Jul 2019

நான் தளபதி ரசிகன்!

ஆடை திரைப்படம் நேற்று பல்வேறு சிக்கல்களுக்கு இடையே வெளியானது. அப்போது பேசிய இயக்குநர் ரத்னகுமார், “நான் தளபதியின் ரசிகன். ஒரு படத்தை ரிலீஸ் செய்ய, இவ்வளவு கூட கஷ்டப்படவில்லை என்றால் எப்படி?’’ என்றார். நடிகர் விஜய்க்கு ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பிரச்னை ஏற்படுவது சகஜமான ஒன்று.  

10:14 (IST)20 Jul 2019

ஆடை – ஆரோக்கிய விவாதம்

சிறந்த படம் ஆரோக்கிய விவாதங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில், ஆடை திரைப்படம் பல ஆரோக்கிய விமர்சனங்களை முன்னெடுக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்

09:52 (IST)20 Jul 2019

’ஆடை’யில் ஆபாசம் இல்லை!

சினிமா விமர்சகர், ரமேஷ் பாலா, “ஆடை படத்தின் போஸ்டரை வைத்து தியேட்டருக்கு செல்லாதீர்கள். படத்தில் ஆழமான செய்தி காத்திருக்கிறது. அதில் ஆபாசம் எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார். 

09:40 (IST)20 Jul 2019

ஸ்பாட்டில் அமலா பால்

நேற்று ஆடை படம் ரிலீஸாகாமல் பிரச்னை ஆன போது, உடனடியாக் தயாரிப்பாளரையும், இயக்குநரையும் சந்தித்து தீர்வு கண்டார் அமலா பால். அமலா பால்

09:32 (IST)20 Jul 2019

வேறெந்த நடிகையும் செய்யாத ஒன்று!

பட ரிலீஸின் போது தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை ஏற்படும் போது, விஜய் சேதுபதி உட்பட சில நடிகர்கள் தான் அவர்களின் சம்பளத்தை விட்டுக் கொடுத்து, தயாரிப்பாளருக்கு தோள் கொடுப்பார்கள். ஆனால் முதன் முறையாக ஒரு நடிகை தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் என்றால் அது அமலா பால் தான். 

08:35 (IST)20 Jul 2019

சம்பளத்தை விட்டுக் கொடுத்த அமலா பால்!

நேற்று காலை ‘ஆடை’ திரைப்படம் வெளியாகாமல் பைனான்ஸியல் பிரச்னைகளில் சிக்கியது. இதனால் காலை மற்றும் மதிய காட்சியோடு பத்திரிக்கை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. என்ன செய்தால் பிரச்னை தீரும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடன் விவாதித்த அமலா பால், தனது சம்பளத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுத்தார். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது ‘ஆடை’

15:20 (IST)19 Jul 2019

Aadai: அமலா பாலின் துணிச்சல்

இந்தப் படத்தின் சில காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்திருக்கிறார் அமலா பால் 

15:17 (IST)19 Jul 2019

’ஆடை’: உறக்கமில்லாத உழைப்பு

5 நாட்கள், தான் உறக்கமில்லாமல் ‘ஆடை’ படத்திற்காக உழைத்ததாகவும், க்யூபிற்கு படத்தை அனுப்பிவிட்டு, காலையில் வந்து தூங்கி விழித்த பிறகு இந்த படத்தை எனது மனைவி என்னிடம் காட்டினார் என இயக்குநர் ரத்னகுமார் நேற்று ட்வீட் செய்திருந்தார். 

14:34 (IST)19 Jul 2019

அமலா பால் ட்வீட்

இன்று காலை ஆடை பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, நடிகை அமலா பால் போட்டிருந்த ட்வீட்

13:38 (IST)19 Jul 2019

வலிமையுடன் இருங்கள்

ஆடை திரைப்பட குழுவினர் இந்த மாதிரி சமயத்தில் அதிக வலிமையுடன் இருக்க வேண்டும் என்கிறார் ரகுநந்தன்

12:51 (IST)19 Jul 2019

மதிய காட்சிகளும் ரத்து

ஆடை படத்தின் மீதான ஃபைனான்சியல் பிரச்னை தொடர்ந்து நடந்துவரும் நிலையில், காலை காட்சியைத் தொடர்ந்து தற்போது மதிய காட்சிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 

11:49 (IST)19 Jul 2019

காலை காட்சி ரத்து

பண பிரச்னையில் சிக்கியிருப்பதால் ஆடை இன்னும் ரிலீஸாகவில்லை. காலை காட்சிகளும், பத்திரிக்கையாளர் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மதியத்திற்குள் பிரச்னைகளை முடித்து ரிலீஸ் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

Aadai Release Live: படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் நடித்திருப்பதற்காக சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. ஆனால் தனக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருப்பதாலேயே ஒத்துக் கொண்டதாகவும், தனது தாய் மற்றும் பாய் ஃபிரெண்டின் முழு சம்மததுடன் தான் ஆடை படத்தில் அப்படியான காட்சியில் நடித்ததாகவும் ஒரு நேர்க்காணலில் தெரிவித்திருந்தார் அமலா பால்.

அதோடு, ”இதில் பாலியல் ரீதியாக எதுவும் இல்லை. அந்தக் காட்சியின் சூழலைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். உண்மையில், அந்தக் காட்சியில் நடிக்கும் போது, நான் மிகவும் சக்தி வாய்ந்தவளாக உணர்ந்தேன். ஆரம்பத்தில், இதை எப்படி செய்வது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடித்து முடித்த பிறகு, என் உடல் எனக்கு இன்னும் கம்ஃபர்டபிளாக இருந்தது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Amala pauls aadai release live