Aranmanai Kili Pragathi Dance Video: பல திரைப்படங்களில் நடித்துள்ள ’பிரகதி’ பிரபல தமிழ் சீரியலான ‘அரண்மனை கிளி’-யில் ‘மாமியார்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமூக ஊடகங்களில் பிஸியாக இருக்கும் பிரகதி, அடிக்கடி ஒர்க் அவுட் படங்கள், நடன வீடியோக்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவற்றிற்கு பிரகதியின் ரசிகர்கள் இன்னும் தீவிர ரசிகர்களாகியிருக்கிறார்கள்.
சீரியலுக்கு ’குட் பை’: சினிமா நடிகையானார் ‘பகல் நிலவு’ ஷிவானி
இப்போது, பிரகதி சூப்பர்ஹிட் பாலிவுட் பாடலான ‘கஜ்ராரே’ படத்தின் பாடலுக்கு ஒரு புதிய நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அவரது ஹாட் டான்ஸ் அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
Tamil News Today Live: தொடரும் தங்கம் விலை குறைவு!
பிரகதி அந்த வீடியோவில், "தினமும் உங்களுக்கு நல்லது என்று ஏதாவது செய்யுங்கள்" என்று தலைப்பிட்டுள்ளார். வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவரது நடன நிகழ்வை நேசித்து, அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் தங்களது அன்பை வெளிக்காட்டி வருகிறார்கள்.
இதற்கு முன் நடிகை பிரகதியும் அவரது மகனும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாத்தி கமிங் பாடலுக்கு செம குத்து டான்ஸை மாஸாக ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”