Advertisment

சீரியலுக்கு ’குட் பை’: சினிமா நடிகையானார் ‘பகல் நிலவு’ ஷிவானி

தனது கவர்ச்சியான படங்களால் ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருக்கும், ஷிவானியின் அடுத்த அவதாரம் இது. 

author-image
WebDesk
New Update
Tamil TV News, Zee tamil Rettai Roja Shivani replaced by Chandhini

ஷிவானி நாராயணன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியின் டைட்டில்  வெற்றியாளரான முகென் ராவ், கோலிவுட்டில் அடுத்தடுத்தப் படங்களில் கையெழுத்திட்டுள்ளார். இவரது முதல் படத்தை 'பாகுபலி' தமிழ் பதிப்பின் விநியோகஸ்தர் கே புரொடக்ஷன்ஸ் ராஜராஜன் தயாரிக்கிறார். இதில் திவ்ய பாரதி முன்னணி நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் திவ்யா.

Advertisment

Tamil News Today Live: செப்டம்பர் 1 முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி

Tamil Serial actress latest images படங்களால் இணையத்தை கலக்கும் ‘இரட்டை ரோஜா’ ஷிவானி நாராயணன்...

இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலும் கையெழுத்திட்டுள்ளார் முகென். இதனை அஞ்சனா அலிகான் இயக்குகிறார். இவர் நானி, நித்யா மேனன் மற்றும் பிந்து மாதவி நடித்த 'வெப்பம்' என்ற ஹிட் படத்தை இயக்கியவர். இதில் 'பாகல் நிலாவு' சீரியல் புகழ் பிரபல தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தனது கவர்ச்சியான படங்களால் ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருக்கும், ஷிவானியின் அடுத்த அவதாரம் இது.

ரைஸ் பிரியரா நீங்க? இந்த ஹெல்தியான ரெசிபிய ட்ரை பண்ணுங்க!

'பிக் பாஸ் 4' போட்டியாளராக ஷிவானியின் பெயர் அடிபடுகிறது. மேலும் அவர் 'பிக் பாஸ் 3' பட்டத்தை வென்ற முகென் ராவுடன் இணைவது நிச்சயம் நிறைய ஆர்வத்தை உண்டாக்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment