/tamil-ie/media/media_files/uploads/2020/02/Azhagu-Serial.jpg)
Azhagu Serial
Azhagu on Sun TV : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகு’ சீரியலில் நாளுக்கு நாள் புது புது பிரச்னைகளுக்கு அடிகோலி வருகிறாள் பூர்ணா.
’சிக்’ என்று உடல் எடையைக் குறைத்த ஹன்சிகா! அடுத்த இன்னிங்ஸிங்கு தயாராகிறாரா?
தன் மீது இருக்கும் அத்தனை வெறுப்புகளையும் இரக்கமாக மாற்ற அவள் கையிலெடுத்த ஐடியா தான் வீல்சேர். சிறைக்குள் சில பெண்கள் அவளை தாக்கியதால், தன்னால் இனி நடக்க முடியாது என மருத்துவரின் மூலம் குடும்பத்தினரை நம்ப வைத்தாள். இதனால் பூர்ணாவின் கணவன் மகேஷும் அவள் மீது தான் கொண்டிருந்த அனைத்து கோபங்களையும், வெறுப்புகளையும் மறந்து, அவனுக்கு பணிவிடைகள் செய்து வந்தான். சுதாவை தன் காலை தொட்டு எண்ணெய் தேய்த்து விடவும் செய்தாள் பூர்ணா.
இதை அப்படியே விட்டிருக்கலாம், வீணாக ரவி முன்பு சுதாவுக்கு நன்றி வேறு சொன்னாள். இதனால் சந்தேகமடைந்த சுதா, பூர்ணாவை கவனிக்க தொடங்கினாள். எண்ணெய் தேய்த்து விட்ட விஷயத்தில், சுதா மீது கோபமான ரவி அவளை கடுமையாக திட்டினான். இதைப் பார்த்த பூர்ணாவுக்கு அத்தனை சந்தோஷம். மகேஷை அழைத்து எனக்கு ஸ்வீட் வேணும் என்று கேட்டவள், அதோடு விடாமல் ஃபோனில் பாட்டை போட்டு டான்ஸும் ஆடினாள். அவள் ஆடிய அந்த ஆட்டத்தை சுதா பார்த்ததோடு, வீடியோவும் எடுத்துவிட்டாள்.
வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ
சுதாவை பார்த்த பூர்ணாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டோமே என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாமல், உங்களை எல்லாம் பழி வாங்காமல் விட மாட்டேன் என்கிறாள். இதற்கிடையே மகேஷின் ஃபோனுக்கு வீடியோ ஒன்றை அனுப்புகிறாள் சுதா. அது பூர்ணாவின் வீடியோவா, என அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.