Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பாவின் சதியால் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்திருக்கிறார்கள்.
அட! இவ்வளவு துடிப்புடன் கூடைப்பந்து விளையாடுவாரா ஒபாமா?
மருமகளை தேடி செளந்தர்யா ஊரெல்லாம் அலைய, அவளோ பிரசவ வலியில் மயக்கமடைந்திருக்கிறாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் மாமியார் செளந்தர்யா. அங்கே எந்த டாக்டரும் இல்லாததால், வேறு வழியில்லாமல் வெண்பாவை அழைக்கிறார். அவளை பழி வாங்க நினைக்கும் வெண்பாவுக்கோ, ஏக கொண்டாட்டம்.
சிசிடிவி கேமராவை ஆஃப் செய்துவிட்டு, விஷ மருந்துடன் கண்ணம்மாவை கொலை செய்ய திட்டமிடுகிறாள். அப்போது துர்கா வந்து கண்ணம்மாவை காப்பாற்றி வெண்பாவை கடத்திச் செல்கிறான். பிரசவத்தை பார்க்க டாக்டர் இல்லாததால், அங்கே இருந்த கண்ணம்மாவின் கணவன் பாரதி பிரசவத்தை பார்க்கிறார். கண்ணம்மாவிற்கு அழகான பெண் குழந்தை பிறக்க, பாரதி கண்களில் நீர் மல்க குழந்தையை பார்க்கிறான்.
பின்னர் குழந்தையை நர்ஸ் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறான் பாரதி. அவன் சென்றதும் கண்ணம்மாவிற்கு மீண்டும் வலி ஏற்படுகிறது. அப்போது மற்றுமொரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள் கண்ணம்மா. ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளைப் பார்த்து, நெகிழ்ந்து போகிறார் செளந்தர்யா. இரட்டை குழந்தைகளை வளர்க்க கண்ணம்மா சிரமப்படுவாள் என்றும், எப்படியாவது அவளை பாரதியுடன் சேர்த்து வைக்க இதை விட்டால் வேறு வழியில்லை எனவும், கறுப்பான குழந்தையை தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா. கண்ணமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது, நர்ஸுக்கும், செளந்தர்யாவுக்கும் மட்டும் தான் தெரியும்.
நர்ஸிடம் தன் கதையை சொன்ன கண்ணம்மா, குழந்தையை தூக்கிக் கொண்டு பாரதியின் வீட்டிற்கு செல்கிறாள். அவளைப் பார்த்த பாரதி ’சொத்திற்காக தானே திரும்பவும் வீட்டிற்கு வந்த, வெளியே போ என விரட்டுகிறான். உன் சொத்துக்காக யார் வந்தது, அது எனக்கு வேண்டாம், இது உன் குழந்தை என ஒத்துக் கொள் என சண்டை போடுகிறாள் கண்ணம்மா. அதோடு பாரதியை டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க, வர சொல்கிறாள்.
சூரரைப் போற்று முதல் அந்தகாரம் வரை: ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி படங்கள்!
குடும்பத்தினர் அனைவரும் கண்ணம்மாவுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஆனால் பாரதி மீண்டும் கண்ணம்மாவை வருணுடன் இணைத்து தவறாக பேசுகிறான்.
பாரதி கட்டாயம் டெஸ்ட் எடுக்க வரவேண்டும் என வலியுறுத்தும் கண்ணம்மா, குழந்தையுடன் நடு வீட்டுக்குள் அமர்ந்து, எனக்காக இல்லையென்றாலும் என் குழந்தை தந்தை பெயர் தெரியாமல் வளரக் கூடாது என்பதற்காக இதனை நான் செய்வேன் என்கிறாள். பின்னர் சண்டையிட்டு கோபத்தோடு வீட்டை விட்டு செல்கிறாள். பாரதி எப்போது உண்மையை தெரிந்துக் கொள்வான்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”