இரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா?

அனைவரும் சேர்ந்து பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ந்து குழந்தையை ஆசீர்வதிக்கும்படி கூறுகிறார்கள். எதுவும் பேச முடியாமல் குழந்தையை ஆசீர்வதித்துச் செல்கிறான் பாரதி.

By: November 26, 2020, 5:38:28 PM

Tamil Serial News:  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து விட்டார்கள்.

சினிமா, சீரியல், டப்பிங், குக்கிங்: மறக்க முடியாத தீபா வெங்கட்!

கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த பாரதி, குழந்தையை நர்ஸ் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறான். அவன் சென்றதும் கண்ணம்மாவிற்கு மீண்டும் வலி ஏற்படுகிறது. அப்போது மற்றுமொரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள் கண்ணம்மா. ஆனந்த கண்ணீருடன் குழந்தைகளைப் பார்த்து, நெகிழ்ந்து போகிறார் செளந்தர்யா. இரட்டை குழந்தைகளை வளர்க்க கண்ணம்மா சிரமப்படுவாள் என்றும், எப்படியாவது அவளை பாரதியுடன் சேர்த்து வைக்க இதை விட்டால் வேறு வழியில்லை எனவும், கறுப்பான குழந்தையை தூக்கிச் செல்கிறார் செளந்தர்யா. கண்ணமாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது, நர்ஸ், செளந்தர்யா, அறிவு மற்றும் அகில் ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.

கண்ணம்மா தனது குழந்தைக்கு பெயர் சூட்டுவது தெரிந்ததும், அதே கோயிலில் மற்றொரு குழந்தைக்கும் பெயர் சூட்ட ஏற்பாடு செய்கிறார் மாமியார் செளந்தர்யா. இதற்கிடையே கோமதியை வைத்து, கண்ணம்மாவின் குழந்தையை கடத்த திட்டம் போடுகிறாள் வெண்பா. குழந்தையை கோமதி தூக்கிச் செல்வதைப் பார்த்த சௌந்தர்யா, அவளிடமிருந்து குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார்.

பாரதியிடம் இருக்கும் குழந்தைக்கு சௌந்தர்யா கூறியபடி ஹேமா எனவும், கண்ணம்மாவிடம் இருக்கும் குழந்தைக்கு சௌந்தர்யா லக்ஷ்மி எனவும் பெயர் வைக்கிறார்கள். பின்னர் கண்ணம்மா தனது குழந்தையை தொட்டிலில் போட்டபோது, போன் பேசிக் கொண்டிருந்த பாரதி துளசியையும், கண்ணம்மாவையும் பார்த்துவிடுகிறார்.

கோபமடைந்த பாரதி, அவரிடம் ஏன் இங்கு வந்தாய், என்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறாயா என சண்டை போடுகிறான். அங்கிருந்த அனைவரும் யாரிவர் என்று கேட்க, என் குழந்தைக்கு அப்பா என்கிறாள் கண்ணம்மா. பிறகு அனைவரும் சேர்ந்து பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ந்து குழந்தையை ஆசீர்வதிக்கும்படி கூறுகிறார்கள். எதுவும் பேச முடியாமல் குழந்தையை ஆசீர்வதித்துச் செல்கிறான் பாரதி.

அந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்!

இதற்கிடையே செளந்தர்யா அவரது கணவரிடம், கண்ணம்மாவை பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்ததை கோமதி கேட்டுவிட்டாள். இந்த விஷயங்களை எப்படியாவது வெண்பாவிடம் சொல்ல வேண்டும் என துடிக்கிறாள். வெண்பாவுக்கு தாலி கட்ட வந்த துர்கா, பாரதியையும் கண்ணம்மவையும் பார்த்து அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டதாக தவறாக நினைத்துக் கொள்கிறான். அடுத்து என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bharathi kannamma serial vijay tv tamil serial news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X