Bigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் சர்ச்சை நடிகர்? அப்போ தினமும் ரணகளம் தான்!

10 நிமிடம் எங்காவது பேசினாலே 10 நாளுக்கான கண்டெண்டைக் கொடுத்து விடுவார்.

10 நிமிடம் எங்காவது பேசினாலே 10 நாளுக்கான கண்டெண்டைக் கொடுத்து விடுவார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss 3 Tamil

Bigg Boss 3

Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் நாளை மறுதினம் தொடங்குகிறது.

Bigg Boss 3: பிக்பாஸ் 3 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றமா?

Advertisment

இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கு அறிமுகமானது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக சின்னத் திரையிலும் கால் பதித்தார் நடிகர் கமல் ஹாசன். முதல் சீசனில் ஓவியா, காயத்ரி, ரைஸா, சக்தி, வையாபுரி, ஆரவ், சினேகன், நமிதா, ஜூலி உட்பட 14 பேர் களம் இறங்கினார்கள். பின்னர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்டோர் இணைந்துக் கொண்டார்கள்.

Bigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள்ள இந்த போட்டியாளரா? ப்ளீஸ் வேணாம் ஆளை மாத்துங்க – ரசிகர்கள் அதிருப்தி

முதல்முறை என்பதால், ரசிகர்கள் பரபரப்புடன் தினமும் பார்த்து வந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் ஆரவ் வெற்றியாளரானார். ரசிகர்களின் மனங்களை வென்றார் ஓவியா. இந்நிலையில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-வில் மும்தாஜ், ஜனனி, ரித்விகா, மமதி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். முந்தைய சீசன் போல் விறுவிறுப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு இதில் இருந்தது. இறுதியில் டைட்டில் வின்னரானார் ரித்விகா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் இவர்கள் தான்!

Advertisment
Advertisements

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை துவங்கும் 3-வது சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியுள்ளது. நெருங்கிய வட்டாரத்தினர் கொடுத்த தகவலின்படி ஜாங்கிரி மதுமிதாவும், மோகன் வைத்யாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

Radha Ravi about Nayanthara

இவர்களுடன் நடிகர் ராதாரவி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோரும் கலந்துக் கொள்கிறார்களாம். ராதாரவி 10 நிமிடம் எங்காவது பேசினாலே 10 நாளுக்கான கண்டெண்டைக் கொடுத்து விடுவார். சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சையான கருத்துகளைக் கூறி திமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் 100 நாட்கள் உள்ளே இருந்தால் என்னென்ன சர்ச்சைகளெல்லாம் வரப்போகிறதோ என்ற ஆவலில் காத்திருக்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்!

Bigg Boss Tamil Radharavi Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: