Bigg Boss Tamil 4: பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது விஜய் டிவி.
Tamil News Today Live: வரும் 29-ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் இதனை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாத இறுதியில் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை 100 நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெறும். பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு, தங்கள் நிஜ கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவார்கள். திரையில் வில்லனாக தெரிந்த பலர் நிஜத்தில் ஹீரோவாகவும், ஹீரோவாக ஜொலித்த பலர் வில்லனிஸத்தையும் பிரதிபலிப்பார்கள்.
சுவையான கருவேப்பிலை குழம்பு: எவ்ளோ நோய்களை விரட்டுது பாருங்க!
இந்நிலையில் இந்தாண்டு கொரோனா காரணமாக வழக்கமாக பிக் பாஸ் தொடங்கும் ஜூன் மாதம் தொடங்கவில்லை. நிகழ்ச்சி நடக்குமா? நடக்காதா என ரசிகர்களுக்கு கேள்வி எழுந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4-க்கான ப்ரோமோவை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தது விஜய் டிவி நிர்வாகம். அடுத்தடுத்து 2 ப்ரோமோக்கள் வெளியான நிலையில், பிக் பாஸ் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையே இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்தும், ஆரம்பிக்கும் நாள் குறித்தும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
24, 2020
இந்த எதிர்பார்பை ஒரு வகையில் பூர்த்தி செய்யும் விதமாக, பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4-ம் தேதி மாலை ஆறு மணிக்கு தொடங்கும் என விஜய் டிவி தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
24, 2020
பிக் பாஸா, ஐ.பி.எல் கிரிக்கெட்டா? என முடிவெடுப்பதில் தமிழ் ரசிகர்கள் ரொம்பவும் சிரமப்படுவார்கள் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
24, 2020
24, 2020
எப்போதும் போல கமலுக்காக பார்க்கப் போகிறேன் என இவர் தெரிவித்துள்ளார்.
24, 2020
எல்லாமே சவுக்கு அடி தான்... தலைவா பட்டைய கிளப்பு என இவர் குறிப்பிட்டுள்ளார்.
24, 2020
இப்படி ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்பார்ப்பை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”