Advertisment

சுனைனா, அதுல்யா, ரம்யா... பிக்பாஸ் 4-ல் யாரெல்லாம்னு பாருங்க!

முன்னதாக அவர் பிக் பாஸ் ப்ரோமோ படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 contestants, Bigg Boss Kamal Haasan

பிக் பாஸ் தமிழ்

கொரோனா வைரஸ் லாக்டவுன் பொழுதுபோக்கு துறையை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் ஈடுபட்டுள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர். முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் படபிடிப்பை நடத்த அனுமதி வழங்குமாறு திரைத்துறையினர், அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தற்போது வரை, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

Papaya: முக்கியமான அந்தத் தருணத்தில் இந்தப் பழத்தை சாப்பிடலாமா?

இந்நிலையில், செப்டம்பர் இறுதியில் இருந்து 'பிக் பாஸ் 4' படப்பிடிப்பைத் தொடங்க கமல்ஹாசன் முன்வந்திருப்பதாக, தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக அவர் பிக் பாஸ் ப்ரோமோ படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் பட்டியலில்  இளம் கதாநாயகிகள் சுனைனா, ரம்யா பாண்டியன் மற்றும் அதுல்யா ரவி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களுடன் நடிகர் இர்பான், நடிகைகள் கிரண், வித்யுலேகா ராமன் மற்றும் 'குக் வித் கோமளி' புகழ் சிவாங்கி மற்றும் புகழ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையின் கொரோனா தொற்றுக்கு முக்கியக் காரணமான 5 மண்டலங்கள்

'பிக் பாஸ் 4' நிகழ்ச்சி தொடங்குவதைப் பற்றியோ, அல்லது போட்டியாளர் பட்டியல் குறித்தோ விஜய் டிவியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு ரியாலிட்டி ஷோ நிச்சயமாக நிச்சயமாக என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment