ஒரு வாரமாக 3 இலக்கங்களில் புதிய கொரோனா தொற்றுகளை பதிவு செய்து வந்த சென்னை, கடந்த மூன்று நாட்களாக தினமும் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றுகளை பதிவு செய்து வருகிறது.
சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் திறப்பு: அரசு அறிவிப்பு
கோடம்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்கள், இந்த எண்ணிக்கையில் பங்காற்றியிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட தொற்றுகள், இந்த மண்டலங்களில் பதிவாகியுள்ளன.
சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், ”அண்ணா நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர் மற்றும் அடையாறு ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தும் மண்டலங்கள். சென்னை பெருநகர மாநகராட்சி தினமும் சராசரியாக 12,000 பேரை சோதிக்கிறது. நாங்கள் இப்போது மிகவும் தீவிரமான சோதனைக்கு திட்டமிட்டுள்ளோம். நேர்மறையான தொற்றுகளின் சராசரி எண்ணிக்கையை விட, சோதனையை குறைந்தது 10 மடங்கு அதிகமாக்குவதே, இதன் நோக்கம்” என்றார்.
"தற்போதைய நிலவரப்படி, நேர்மறை விகிதம் 10% மற்றும் அதை 5% ஆகக் குறைப்பதே நோக்கம். இது ஆக்டிவாக இருக்கும் தொற்றுகளை, குறைக்கவும் வழி வகுக்கும்” என ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஒவ்வொரு 100 சோதனைகளுக்கும் கோவிட் -19 நேர்மறை தொற்றுகளின் எண்ணிக்கையை வைத்து, சென்னையின் நேர்மறை விகிதம் (டிபிஆர்) கடந்த வாரம் சுமார் 8-9%. தற்போது தினசரி 1,000-க்கும் மேல் தொற்று இருப்பதால், கடந்த இரண்டு நாட்களில் டி.பி.ஆர் 10% வரை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் இதை 7% ஆக மாற்றுவதை சென்னை பெருநகர மாநகராட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
”இருப்பினும், இது ஒரு கடினமான வேலையாகும், ஏனெனில் ஒரு தனி நபர் சூப்பர்-ஸ்ப்ரெடராக இருக்க முடியும். ஆனால் இதுபோன்ற சூழ்நிலையைத் தடுக்க சிவிக் பாடி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அம்பத்தூரில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளைப் பொறுத்தவரை, இந்த பகுதிகளில் (சென்னை மாநகராட்சி வரம்புக்குட்பட்டவை ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் வருபவை) சென்னையில் இருந்து தொற்றுகள் பரவி, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாக” ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் வீடியோ
“நகரின் தெற்குப் பகுதியில் உள்ள தொற்றுகள் செங்கல்பட்டிற்குள் பரவுகின்றன. நீண்ட சென்னையின் சோதனையை அண்டை மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான மைக்ரோ திட்டங்களை நாங்கள் இப்போது உருவாக்கி வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”