/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-Promo-Suresh-Chakravarthy.jpg)
Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரமாக இன்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல். இந்த வாரம் நடந்த விஷயங்களை கிரிஸ்பியாக அவர்களுடன் விவாதிப்பார். அப்போது நல்லவைகளுக்கு பாராட்டும், தீயவைகளுக்கு நறுக்கென கொட்டும், போற போக்கில் கிடைக்கும்.
பாசத்தில் அஜித், செயலால் பாகுபலியை விட உயர்ந்து நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி!
#BiggBossTamil இல் இன்று.. #Day13#Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/yFmOyvABzh
— Vijay Television (@vijaytelevision) October 17, 2020
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், மாஸ்க்கை அவிழ்க்கும் கமல், ”உள்ளேயும் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது. பார்க்க பெரிய வில்லனோட அடியாள் மாதிரி இருக்காரே, பேச்சும் ஒரு மாதிரி இருக்கே, இவர் நல்லவரா கெட்டவரான்னு சந்தேகப்பட்டோம். ஆனால் நிஜ முகம் தெரிய ஆரம்பித்ததும் நல்லவர் தான்னு தோணுது. ஹீரோவாவே மாறிடுவார் போல இருக்கு. அப்போ நாம நல்லவங்கனு நெனைச்சிட்டு இருந்தவங்க எல்லாம்?" என சுரேஷ் சக்ரவர்த்தியைப் பாராட்டுகிறார் கமல்.
ரெண்டே நாளில் ஓவர் ஆக்டிங் எனப் பெயர் வாங்கிய அர்ச்சனா…
இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதாலும், சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவு பெருகியிருப்பதாலும், பலத்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.