பாசத்தில் அஜித், செயலால் பாகுபலியை விட உயர்ந்து நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி!

தனது யூ-ட்யூப் சேனலில் வித விதமான ரெசிப்பீக்களை செய்துக் காட்டி அசத்தி வந்தார். 

தனது யூ-ட்யூப் சேனலில் வித விதமான ரெசிப்பீக்களை செய்துக் காட்டி அசத்தி வந்தார். 

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 Promo, Suresh Chakravarthi

Bigg Boss Tamil 4

Bigg Boss Suresh Chakravarthy: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்களுக்கும் மேலாகி விட்டது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் முதலில் பதினாறு பேர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். இப்போது வி.ஜே.அர்ச்சனாவும் வைல்ட் கார்டில் போட்டியாளராக களம் இறங்கியிருப்பதால், மொத்தம் 17 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

Advertisment

ரெண்டே நாளில் ஓவர் ஆக்டிங் எனப் பெயர் வாங்கிய அர்ச்சனா…

இதில் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே, அனிதாவுடனான பிரச்னை காரணமாக ப்ரோமோவில் இடம் பெற்று வந்தார் சுரேஷ் சக்ரவர்த்தி. பல படங்களில் நடித்துள்ள சுரேஷ், சிறந்த சமையல் கலைஞரும் கூட. தனது யூ-ட்யூப் சேனலில் வித விதமான ரெசிப்பீக்களை செய்துக் காட்டி அசத்தி வந்தார்.

Bigg Boss Suresh Chakravarthy, Vijay TV Bigg Boss அஜித், விக்ரமுடன் சுரேஷ் சக்ரவர்த்தியை ஒப்பிட்ட ரசிகர்கள்.

Advertisment
Advertisements

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர் வாழ்க்கையில் பெரும் கடினமான தருணங்களை கடந்து வந்தவர். பதினாறு வயதில் மகனுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல போராட்டங்களுக்குப் பிறகு நோயிடமிருந்து மகனை மீட்டார். தற்போது தாத்தாவாக காத்துக் கொண்டிருக்கிறார்.

Bigg Boss Suresh Chakravarthy, Vijay TV Bigg Boss செயலால் உயர்ந்து நின்ற சுரேஷ் சக்ரவர்த்தி.

நேற்றைய நிகழ்ச்சியில், கேப்டனுக்கு நாமினேட் ஆன 3 பேரையும், அவர்களது ஆதரவாளர்கள் தூக்கி சுமக்க வேண்டும் என கட்டளையிட்டார் பிக் பாஸ். இதில் தனது வயதையும் பொருட்படுத்தாமல், கேப்ரியல்லாவை தூக்கி சுமந்தார். ஒரு கட்டத்தில் ‘வேணாம் தாத்தா, ப்ளீஸ் தாத்தா’ என கீழே இறங்கி, சுரேஷ் சக்ரவர்த்தியை கட்டியணைத்துக் கொண்டார். இதைப் பார்த்த ரசிகர்களும் உணர்வுப்பூர்வமானார்கள்.

சென்னை மக்களுக்கு செம்ம வீக் எண்ட்: திங்கட்கிழமை வரை மழை இருக்கு!

இந்தக் காட்சியை ‘தெய்வ திருமகன்’ படத்தில் வரும் விக்ரமுடனும், ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற அஜித்துடனும் இணைத்து சமூக வலைதளங்களில் சுரேஷை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: