Super Star Rajinikanth : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. ஊரடங்கு உத்தரவை அரசு அறிவிப்பதற்கு முன்பே, இந்தியா முழுவதும், சினிமா மற்றும் சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
யாரிந்த யோகா காதலி? மர காதலி? : புகைப்படத் தொகுப்பு
தற்போது கோலிவுட் தொடங்கி, பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த சினிமா உலகமும் முடங்கியுள்ளது. இதனால் சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் நடிகர் சங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கு பெரிய நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் திரை நட்சத்திரங்கள், தங்கள் குடும்பத்துடன் முழுமையான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் புதுப்புது 'சேலஞ்சுகளை' விடுத்து இந்த கடினமான நேரத்தை சுவாரஸ்யப்படுத்தி மகிழ்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு நட்சத்திரங்கள் மத்தியில் #BetheREALMAN என்ற சவால் தற்போது பிரபலமாகிவருகிறது.
‘அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வங்கா துவங்கிய இந்த சேலஞ்ச், இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக் கடந்து தற்போது ‘மெகா ஸ்டார்' சிரஞ்சீவி வரை வந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் சவாலை ஏற்ற சிரஞ்சீவி, தனது வீட்டை சுத்தப்படுத்தி, தனது அம்மாவுக்கு சுட சுட ஆனியன் பெசரட்டையும் சுட்டுக் கொடுத்தார். பெசரட்டு செய்யும் போது, அனுபவம் வாய்ந்த ஹோட்டல் செஃப் போல ஸ்டைலாக தூக்கிப் போட்டு புரட்டிய ஸ்டைல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
இடஒதுக்கீட்டின் பயன் உண்மையான பயனாளர்களுக்கு கிடைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்
தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் பயங்கர வைரலாகி வருகிறது. டாஸ்க்கை செய்து முடித்த சிரஞ்சீவி, இந்த சேலஞ்சை செய்யும்படி தனது நண்பர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கே.டி.ராமாராவையும் நாமினேட் செய்துள்ளார். ஒருவேளை இந்த சவாலை ரஜினி ஏற்றுக் கொண்டால், அந்த வீடியோ உலகலவில் கவனம் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”