/tamil-ie/media/media_files/uploads/2020/02/Chithi-2-Venba.jpg)
Chithi 2 Venba
Chithi 2 : தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ‘சித்தி’ சீரியலுக்கான இடம் மிக முக்கியமானது. தூர்தர்ஷனில் ஏற்கனவே தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், தனியார் தொலைக்காட்சிகளாலும் தரமான சீரியலை தர முடியும் என்ற நம்பிக்கை விதையை விதைத்தது சித்தி தான்.
வீடியோ பாருங்க… பாம்புகூட இப்படி ஆடியிருக்குமான்னு தெரியல…!
தற்போது இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சித்தி சாரதா (ராதிகா) மீது உயிரையே வைத்திருப்பவர் வெண்பா (ப்ரீத்தி ஷர்மா). அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கவின் (நந்தன்). இந்நிலையில் வெண்பாவும், கவினும் சன் டிவி-யின் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
சித்தி 2 கவின் மற்றும் வெண்பா பங்குபெறும் சிறப்பு #வணக்கம்தமிழா
உங்கள் #SunTV-யில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிக்கு காணத்தவறாதீர்கள்..! #VanakkamTamizha#VanakkamTamizhaOnSunTV#SociallySunpic.twitter.com/dy0PEIFbo0
— Sun TV (@SunTV) February 10, 2020
கண்களில் உணர்ச்சி பொங்க கைகளில் ஆஸ்கர்! – படங்கள் உள்ளே
அப்போது பேசிய கவின் சித்தி சீரியல் ஒளிபரப்பாகும் போது தான் 6-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். தான் பார்த்த ஒரே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தனக்குக் கிடைத்த வாய்ப்பை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெண்பாவோ சித்தி சீரியல் ஒளிபரப்பாகும் போது தான், நான் பிறந்தேன் என்றார். மேலும் தொடர்ந்த அவர், “வெண்பாங்கற என் கதாபாத்திரம் துறுதுறுப்பானது. கவினை சைட் அடிக்கிற மாதிரி இருக்கும். ராதிகா மேம் ரொம்ப ஸ்வீட்டா இருப்பாங்க. நடிப்புல அவங்கள அடிச்சுக்க முடியாது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.