நம்ம சீரியல் நடிகைங்க கிட்ட இருந்து பாம்பு இன்னும் கத்துக்கணும் - வீடியோ

நின்று, முட்டிப் போட்டு, படுத்து, புரண்டு, மீண்டும் எழுந்து என விதவிதமாக பாம்பு நடனம் ஆடினார்.

நின்று, முட்டிப் போட்டு, படுத்து, புரண்டு, மீண்டும் எழுந்து என விதவிதமாக பாம்பு நடனம் ஆடினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV Savale Samali Snake Dance Sun TV

Sun TV Savale Samali

Savale Samali : சன் டிவி-யில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகள் தனித்தன்மையுடன் இருக்கும். அதனாலோ என்னவோ, ரசிகர்களிடம் உடனே கவனம் பெறும். அந்த வகையில் ‘சவாலே சமாளி’ நிகழ்ச்சி சன் டிவி-யில் ஒளிபரப்பாகிறது. இதில் சீரியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் போட்டிப் போட்டுக் கொண்டு சீரியல் நடிகைகள் பாம்பு நடனம் ஆடியது, ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Advertisment

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மகுடி சத்தத்திற்கு ஏற்ப பாம்பு எவ்வாறு நடனமாடும் என்ற டாஸ்க் சீரியல் நடிகைகளுக்குக் கொடுக்கப்பட்டது. ’நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வரும் ’எங்கேயும் எப்போதும்’ பாடலின் இசையயை மகுடியில் வாசித்ததும், அதற்கு பாம்பு போல ஒவ்வொருவராக நடனமாடினார்கள்.

Advertisment
Advertisements

கண்களில் உணர்ச்சி பொங்க கைகளில் ஆஸ்கர்! – படங்கள் உள்ளே

முதலாவதாக நந்தினி சீரியலின் நித்யா ராம் வளைந்து வளைந்து பாம்பு போல ஆடினார். பின்னர் ஆடிய காயத்ரி ஜெயராம், கண்களில் மிரட்சியோடு முட்டிப் போட்டு வேறு ஸ்டைலில் ஆடினார். அதன்பிறகு தெய்வமகள் சீரியலில் அண்ணியாராக நடித்த காயத்ரி பாம்பு வெஸ்டர்ன் நடனம் ஆடினாஅல் எப்படி இருக்குமோ அப்படி ஆடினார். கடைசியாக ஆடிய நடிகையோ, மற்றவர்களை விட வெகு நேரம் ஆடினார். நின்று, முட்டிப் போட்டு, படுத்து, புரண்டு, மீண்டும் எழுந்து என விதவிதமாக பாம்பு நடனம் ஆடினார். இதைப் பார்ப்பவர்களுக்கு, பாம்பு கூட இத்தனை விதமாக ஆடாது என்று தோன்றுகிறது.

Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: