Advertisment

இது பட்டைய கெளப்பும் குவாரண்டைன்... அதிரடியில் இறங்கிய தேவயானி

அனைவரும் இந்த 21 நாட்களில் முறையாக ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak tamil heroine Devayani learns Silambam with her daughters

Coronavirus outbreak tamil heroine Devayani learns Silambam with her daughters

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் குவாரண்டைன் ஆகியுள்ளனர். வெகுநாட்களாக தாங்கள் கற்றுக் கொள்ள விரும்பியது, கற்று மறந்தது என அனைத்தையும் தூசி தட்ட துவங்கியுள்ளனர். நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் நாட்டின் தற்போதைய தேவையை உணர்ந்து நிதி உதவி ஆகியவற்றையும் செய்து வருகின்றனர்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனாவை கண்டறிய 3 மணி நேரம் போதும்…”டெஸ்டிங் கிட்டை” கண்டறிந்த நிறைமாத கர்ப்பிணி!

ஒரு சிலர் தங்களின் குவாரண்டைன் நாட்களை உபயோகமாக கழித்து வருகின்றனர். நடிகை தேவயானியும் அதற்கு விதிவிலக்கு ஆகவில்லை.  அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு என்ற இடத்தில் தேவயானியின் கணவர் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி அனைவரும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் பொதுவெளியில் இருந்து விலகியுள்ளனர். தேவயானி மற்றும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளும் அவர்களுடன் தங்கியுள்ளனர்.

மேலும் படிக்க : மாளவிகா, தீபிகா, சிவகார்த்திகேயன் போன்று நீங்களும் ஹீரோக்கள் தான் இதை செய்தால்!

சத்யபாளையம் பகுதியை சேர்ந்த நவோபயா என்ற சிலம்ப பயிற்சியாளார், தேவயானி, அவர்களின் மகள்கள் இனியா மற்றும் பிரியங்கா ஆகிய மூவருக்கும் அவர்களின் பண்ணை வீட்டில் சிலம்பம் கற்றுத் தருகிறார். அனைவரும் இந்த 21 நாட்களில் முறையாக ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது தான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment