கொரோனாவை கண்டறிய 3 மணி நேரம் போதும்..."டெஸ்டிங் கிட்டை” கண்டறிந்த நிறைமாத கர்ப்பிணி!

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் இயந்திரத்தையும், தன் பெண் குழந்தையையும் ஒரே நேரத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் அந்த ஆராய்ச்சியாளர்.

Indian Virologist Minal Bhosle invented Coronavirus Testing kit : இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்களுக்கு நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவிகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நோயை கண்டறியும் மருத்துவ கருவியின் தேவைகளும் நாளுக்கு நாள் உலக நாடுகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ராபர்ட் போஷ் நிறுவனம் 2.30 மணி நேரங்களில் இந்நோயை கண்டறியும் கருவியை கண்டறிந்தது. கடந்தவாரம் அமெரிக்காவின் அபாட் என்ற நிறுவனம் 5 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் கருவியை கண்டறிந்தது. இக்கருவி இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

மேலும் படிக்க : 5 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை … அசத்திய அமெரிக்கா!

இந்தியாவில் இந்த நோயை கண்டறியும் இயந்திரங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் புனேவில் அமைந்திருக்கும் மைலேப் டிஸ்கவரி (MyLab Discovery) என்ற நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறை தலைவர் மினல் தாகவே போஸ்லே என்பவர் இந்த நோய்க்கான கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த கருவியை தயாரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டபோது அவர் 8 மாத கர்ப்பிணி.  ஆறுவார காலத்தில் ஆராய்ச்சியை முடித்து அசத்தியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக, தன்னுடைய பிரசவத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இந்த கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் காக்கும் இயந்திரத்தையும், தன் பெண் குழந்தையையும் ஒரே நேரத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் அந்த ஆராய்ச்சியாளர். அவரின் இந்த மாபெரும் முயற்சியை ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பலரும் பெருமையாக பாராட்டியுள்ளனர்.

மேலும் படிக்க : கொரோனா : பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அமைச்சர் தற்கொலை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close