தலைவருக்கு என்ன ஒரு எனெர்ஜி! அந்த கரீஷ்மா வேற லெவல்! தர்பாரை புகழும் பிரபலங்கள்!

என்னுடைய நாள் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது என ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தெரிவித்துள்ளார்.

Darbar release, darbar fdfs, darbae review
Darbar release, darbar fdfs, darbae review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினியின் 167-வது படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை கூட்டியிருந்த ’தர்பார்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 7000 ஸ்கிரீன்களில் மாஸாக வெளியாகியுள்ளது.

Darbar Movie Review Live: தர்பார் திரைப்படம் வெளியாகாததால் பேனர்களை கிழித்து ரசிகர்கள் ரகளை

மற்ற நடிகர்களின் படங்களுக்கும் ரஜினியின் படங்களுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. எப்போது வெளியானாலும் ரஜினி படங்கள் என்றாலே சாதாரண நாளும் திருவிழா நாள் போல், கொண்டாட்டம் தூக்கலாக இருக்கும். தவிர ரசிகர்களைப் போல பிரபலங்களும் ரஜினியின் படத்தை முதல் நாள் முதல் காட்சியாக பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் தர்பார் படமும் அப்படித்தான்.

2020ம் ஆண்டில் கவனிக்கப்பட வேண்டிய ஆளுமைகள்… ஃபோர்ப்ஸில் இடம் பெற்ற இந்தியர்கள் யார்?

இந்நிலையில் தர்பார் படத்துக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தர்பார் குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

என்னுடைய நாள் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது என ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தெரிவித்துள்ளார்.

தர்பார் படம் மரணமாஸாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் என்னவொரு எனெர்ஜி & கரீஷ்மா என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வெளியான பேட்ட படத்தை இவர் இயக்கியிருந்தார்.

ரஜினிக்கும் யோகிபாபுவுக்குமான காமெடி காட்சிகள், ரஜினி – செந்திலை நினைவுப் படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன், தயா அழகிரி தெரிவித்துள்ளார்.

நடிகை சிம்ரன் தர்பார் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தர்பார் படத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரஜினி ஜொலிப்பதாகவும், இந்த பொங்கல் பண்டிகை சிறப்பானது எனவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.


தலைவர் ஒன் மேன் ஷோ எனவும், அவரது எனெர்ஜியும், கரீஷ்மாவும் வேற லெவல் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Darbar tamil movie review celebrities reactions

Next Story
Darbar Movie Release, Review: ரசிகர்கள் கொண்டாடும் ரஜினி இவர் தான்! வயசு 40 இருக்குமா??Darbar Movie Release, Review
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com