New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Darbar-Live.jpg)
Darbar full Movie download, Darbar full Movie download tamilrockers, Darbar tamil rockers, தர்பார் மூவி, தர்பார், தமிழ் ராக்கர்ஸ்
Tamilrockers leaked Darbar full Movie: ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, 2.0 படங்களை ரிலீஸ் தினத்தன்றே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Darbar full Movie download, Darbar full Movie download tamilrockers, Darbar tamil rockers, தர்பார் மூவி, தர்பார், தமிழ் ராக்கர்ஸ்
Darbar Movie leaked in Tamilrockers: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை திருவிழா போல கொண்டாடினார்கள் ரசிகர்கள். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது. ஆனால் ரிலீஸ் ஆன 3 மணி நேரத்தில் தர்பாரை ஆன்லைனில் திருட்டுத் தனமாக வெளியிட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இதனால் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், சினிமா உலகுக்கு பெரும் மிரட்டலாக இருந்து வருகிறது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முக்கியப் படங்களை ரிலீஸ் தினத்தன்றே வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. வெகுசில தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டன. எனினும் பெரும்பாலான தியேட்டர்களில் காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி திரையிடப்பட்டது.
தமிழ்நாடு முழுக்க ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, 2.0 படங்களை ரிலீஸ் தினத்தன்றே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தப் படத்தை வெளியிட்டாலும்கூட, தியேட்டரில் ஒன்றுக்கு 10 முறை இந்தப் படத்தை பார்த்து வெற்றிபெற வைப்போம் என ரஜினி ரசிகர்கள் கூறியிருந்தனர்.
ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, இன்று மதியமே தர்பார் படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி வெப்சைட்கள் திருட்டுத்தனமாக வெளியிட்டன. அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு இப்படி புதுப் படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் ராக்கர்ஸை சினிமா உலகத்தால் எந்த நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ராக்கர்ஸால் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பாதிக்காது என ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறினாலும், கலெக்ஷன் புள்ளிவிவரங்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.