Advertisment
Presenting Partner
Desktop GIF

ரேட்டிங்கை குறைத்த எதிர்ப்பாளர்கள்: பாராட்டைப் பெற்று வரும் தீபிகாவின் பதில்

ஐ.எம்.டி.பி.யில் சபாக் படத்துக்கு 4.6 ரேட்டிங் மட்டுமே கிடைத்தது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepika Padukone. chhapaak rating

Deepika Padukone

Deepika Padukone : பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் ‘சபாக்’ திரைப்படம் வெளியானது. அந்தப் படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளியாவதற்கு ஒரிரு நாள் முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

Advertisment

ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; பரபரப்பான எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள்

அதனைக் கண்டித்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. படம் வெளியாவதற்கு முதல் நாள் தீபிகா படுகோனும் அந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.  போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்துகொண்டதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும், அவரது படமான சப்பாக் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. அதனை இணையத்தில் பிரதிபலிக்கும் விதமாக, #boycottchhapaak என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. மறுபுறம் #ISupportDeepika என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.

அதோடு சினிமா படங்கள் குறித்த இணையதளமான ஐ.எம்.டி.பியில் சபாக் படத்துக்கு குறைந்த ரேட்டிங்கைக் கொடுத்தனர் தீபிகா எதிர்ப்பாளர்கள். ஆகவே, ஐ.எம்.டி.பி.யில் சபாக் படத்துக்கு 4.6 ரேட்டிங் மட்டுமே கிடைத்தது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாளை நாடோடிகள் 2 வெளியாவதில் சிக்கல் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

இந்தநிலையில், ஐ.எம்.டி.பியில் ரேட்டிங் குறைந்தது குறித்து பேசிய தீபிகா, ‘அவர்களால் ஐ.எம்.டி.பி ரேட்டிங்கைத்தான் மாற்ற முடியும். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது’ என்றார். அவருடைய இந்த பதிலுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Deepika Padukone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment