’சென்னைல இருந்து இந்த ரெண்டையும் வாங்காம வீட்டுக்கு வராதீங்க’ – ரன்வீருக்கு தீபிகாவின் அன்புக் கட்டளை

83 படக்குழுவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, சென்னையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ரன்வீர் சிங்.

Deepika Padukone, Ranveer Singh, 83 film
Deepika Padukone, Ranveer Singh

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தலமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் 1983-ம் ஆண்டு முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து பாலிவுட்டில் ‘83’ என்ற படம் இயக்கப்பட்டுள்ளது. இதில்  கபில் தேவாக ரன்வீர் சிங்கும், அவரது மனைவியாக தீபிகா படுகோனேவும் நடித்துள்ளனர். 1983 வெற்றி அணியில் சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் இருந்தார். அதன்படி ’83’ படத்தில் ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார். இதனை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார்.

டைமிங் மிஸ்… ‘லெக் சைட் சிக்ஸ் புலி’ டி வில்லியர்ஸ்க்கே இந்த நிலைமையா? (வைரல் வீடியோ)

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ‘83’ படம் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் வௌியிடுகிறது. ‘83’ படத்தின் தமிழ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கபில் தேவ், ஸ்ரீகாந்த், கமல்ஹாசன், கபீர் கான், ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் 83 படக்குழுவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, சென்னையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ரன்வீர் சிங். இந்த பதிவுக்கு ரன்வீரின் மனைவி தீபிகா, போட்ட கமெண்ட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

”2 பேரையும் ஒரே ஃப்ரேமுல பாக்குற அந்தத் தருணம்…” – மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ போஸ்டர்!

அதாவது ”ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் இருந்து 1 கிலோ மைசூர் பாக், ஹாட் சிப்ஸில் இருந்து 2.5 கிலோ ஸ்பைசி உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வர வேண்டாம்” என தன் காதல் கணவருக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார் தீபிகா.  இந்த கமெண்ட் தமிழ் ரசிகர்ளை வெகுவாக ஈர்த்துள்ளது.

 

Web Title: Deepika padukone ranveer singh 83 film

Next Story
”2 பேரையும் ஒரே ஃப்ரேமுல பாக்குற அந்தத் தருணம்…” – மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ போஸ்டர்!master third look poster, thalapathy vijay
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com