Advertisment

”2 பேரையும் ஒரே ஃப்ரேமுல பாக்குற அந்தத் தருணம்...” - மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ போஸ்டர்!

ப்ப்பா... இந்த இருவரையும் ஒரே ஃப்ரேமில் காணும் தருணத்தை எவ்வாறு கையாளப் போகிறோம் என நடிகை விஜய லட்சுமி தெரிவித்துள்ளார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
master third look poster, thalapathy vijay

master third look poster, thalapathy vijay

Master 3rd Look Reactions : ’பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Advertisment

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத். இதனை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ’மாஸ்டர்’ திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. அந்த 2 போஸ்டர்களிலுமே விஜய் மட்டும் இடம் பெற்றிருந்தார். ஆனால், விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக்கைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டரும் வெளியானது. முகங்களில் ரத்தம் வழிய, விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒருவரையொருவர் பார்த்து, ஆக்ரோஷமாக கத்துவது போல் இந்த போஸ்டர் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. போஸ்டரைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும், படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதோடு போஸ்டர் குறித்த தங்களது எண்ணத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டருக்கு குவிந்திருக்கும் சில ரியாக்‌ஷன்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

விஜய்யும், விஜய் சேதுபதியும் வேற லெவலில் இருப்பதாக, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது ஃபேவரிட் நடிகர்கள் விஜய்யும், விஜய் சேதுபதியும் கர்ஜிப்பதாக நடிகை இந்துஜா கூறியுள்ளார்.

இவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்

போஸ்டர் கொல மாஸாக இருப்பதாகவும், இப்படியொரு விருந்தை தளபதி ரசிகர்களுக்கு தந்த மாஸ்டர் குழுவினருக்கு தனது நன்றி எனவும் ஷபானா தெரிவித்துள்ளார்.

 

 

என் அன்புக்குரிய இருவர் ஒரே ஃபிரேமில், என நடிகை ரெபா மோனிகா குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டர் என்ற ஹேஷ்டேக் 1 மில்லியன் ட்வீட்களை கடந்திருப்பதாக ராம் சினிமாஸ் கூறியுள்ளது.

இந்த போஸ்டர் ‘மாஸ்டர் பீஸாக’ இருப்பதாக தொகுப்பாளர் ரியோ ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ப்ப்பா... இந்த இருவரையும் ஒரே ஃப்ரேமில் காணும் தருணத்தை எவ்வாறு கையாளப் போகிறோம் என நடிகை விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.

யாரும் கண்டிராத மாஸை, புது வழியில் கொண்டு வருவதை இயக்குநர் லோகேஷ் அறிவார் என காயத்ரி குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் 3-வது லுக் போஸ்டர் வெறித்தனமாக இருப்பதாக சிபி சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Sethupathi Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment