/tamil-ie/media/media_files/uploads/2019/12/karthi-1.jpg)
Actor Karthi, Pollachi rape case, delhi rape case
Delhi Gang Rape Case : 2012 டிசம்பரில் 23 வயது, பிசியோதெரபிஸ்ட் மாணவி நிர்பயா டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏந்ற்படுத்தியது. ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த மாணவிக்கு நீதி கிடைத்திருக்கிறது. முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு குற்றவாளிகளும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: முடிவ கொஞ்சம் மாத்திக்கலாமே தனம்?
Finally justice for Nirbhaya after 8 years. Wondering how long it will take for the Pollachi case to find justice. It’s been a year already. Hope we don’t forget the lessons we learnt from it!
Always stay safe. #NirbhayaCase
— Actor Karthi (@Karthi_Offl) March 20, 2020
இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்ற வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தியும், இந்த மரண தண்டனையை வரவேற்றுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியுள்ள பதிவில், "இறுதியாக நிர்பயாவுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்குக்கு நீதி கிடைக்க எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஒரு வருடம் ஆகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்க மாட்டோம் என்று நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வருடம் முன்பு சபரி ராஜன் என்ற ரிஸ்வந்த், திருநாவுக்கரசு, ஜவுளி கடையின் உரிமையாளர் எம் சதீஷ், திருநாவுக்கரசின் உதவியாளர் டி வசந்தகுமார் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த மணிவண்ணன் ஆகியோர் பல இளம் சிறுமிகளை காதல் என்ற பெயரில், பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது.
’கல்யாணம் தான் ஆகப் போகுதே’: பெண்களே இந்த விஷயத்தில் உஷார்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.