Asuran Remake: தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் காம்போ தமிழ் திரையுலகில் வெற்றிகரமான ஒன்றாகும். 'பொல்லதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' ஆகிய 4 படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிக் கூட்டணியின் இரண்டாவது படமான 'ஆடுகளம்' சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில் சமீபத்திய தகவல் என்னவென்றால், தனுஷின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'அசுரன்' சீன மொழியில் ரீமேக் செய்யப்படுகிறதாம்.
கோலிவுட் வதந்திகள்: லாக்டவுன்ல இதெல்லாம் தான் டாப்…
தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டணியின் கடைசி படமான 'அசுரன்' பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு பாக்ஸ் ஆபிஸில் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியாகவும் மாறியது. தனுஷ் ஒரு ஆற்றல் மிக்க இளைஞனாகவும், அக்கறையுள்ள தந்தையாகவும் தனது அருமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இப்போது, ஒரு பிரபலமான சீன தயாரிப்பு நிறுவனம், திரைப்படம் மற்றும் தனுஷின் நடிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தவிர 'அசுரன்' திரைப்படத்தின் ரீமேக் உரிமைகளுக்காக தயாரிப்பாளர்களையும் அணுகியுள்ளதாம். இது வெற்றிகரமாக நடந்தால், சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படமாக தனுஷின் 'அசுரன்' இருக்கும்.
இதற்கு முன், எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் ரஜினிகாந்தின் '2.0' ஆகியப் படங்கள் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சியான் 60: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம்!
’அசுரன்' திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்தப்படம் தயாரிப்பாளர்களுக்கு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது. தவிர 'கர்ணன்' படத்திற்காக தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார் கலைபுலி எஸ் தாணு. இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”