ஏ.ஆர்.ரகுமான்- ஏ.ஆர்.அமீன் இணைந்த பாடல்: சுஷாந்த்-க்கு அஞ்சலி

குட் பை ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் அவை புதிய தொடக்கங்களையும் குறிக்கின்றன."

By: Updated: September 3, 2020, 11:35:49 AM

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ’தில் பெச்சாரா’ பட ஆல்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடைசி பாடலான, ’நெவர் சே குட்பை’ என்ற பாடல் புதன்கிழமை வெளியானது. இதயத்தை உடைக்கும். இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அவரது மகன் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளார்.

Tamil News Today Live : திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஜூலை மாதம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான ‘தில் பெச்சாரா’, ஜூன் 14 அன்று மும்பை வீட்டில் இறந்து கிடந்த சுஷாந்தின் கடைசி படமாகும். இந்த படத்தில் ஆத்மார்த்தமான “ஹீலில் சாங்” இடம்பெற்றுள்ளது. ’நெவர் சே குட்பை’ என்ற பாடலில் ’தில் பெச்சாரா’வின் முன்னணி நடிகை சஞ்சனா சங்கி, மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் நடித்த கிளிப்பை காட்டுகிறது.

இந்த பாடலை ட்விட்டரில் வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனின் “இசை பயணத்திற்கு” நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “இந்த பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. உனது இசை பயணம் சிறந்து வாழ்த்துகள் ஏ.ஆர்.அமீன்” என்று அவர் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

எல்.கே.சுதீஷ் வெளியிட்ட அதிர்ச்சி கார்ட்டூன்: கடும் எதிர்ப்பால் நீக்கினார்

சமூக ஊடகங்களில் பாடாலை பகிர்ந்த ஏ.ஆர்.அமீன்,”குட் பை ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் அவை புதிய தொடக்கங்களையும் குறிக்கின்றன. இதோ உங்களுக்காக ஒரு சிறப்பு பாடல், இது எங்கள் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது – இந்த பாடலின் ஒரு பகுதியை தில் பெச்சாராவில் கேட்டீர்கள். இப்போது முழுவதுமாக உங்களுக்குத் தருகிறோம். #FarewellToManny” எனக் குறிப்பிட்டிருந்தார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Dil bechara song never say goodbye sushant singh rajput ar ameen ar rahman

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X