எல்.கே.சுதீஷ் வெளியிட்ட அதிர்ச்சி கார்ட்டூன்: கடும் எதிர்ப்பால் நீக்கினார்

“தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே.”

LK Sudhish DMDK cartoon
எல்.கே.சுதீஷ்

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை இப்போதே அரசல் புரசலாக ஆரம்பித்து விட்டன. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் தொண்டர்களிடத்தில் கூட்டணி குறித்து இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Tamil News Today Live : திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கிறது தேமுதிக. ஆனால், ”கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்” என பிரேமலதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

DMDK LK Sudhish Contoversial Cartoon
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டிருந்த கார்ட்டூன்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே. ஆனால், தை மாதத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கேப்டன் அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார். எப்பொழுதுமே தனித்து போட்டியிட்டு களம் கண்ட இயக்கம் தே.மு.தி.க. அதன் பின்னர் கூட்டணிக்குச் சென்றிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாள்கள் உள்ளன. அதுவரை பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அ.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. இந்நிலையில், மக்கள் எடுக்கும் முடிவே ஆட்சியைத் தீர்மானிக்கும். நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் ஸ்டாலின் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். ரஜினி, கட்சி ஆரம்பித்த பின்புதான் அவருடன் கூட்டணியா என்பது குறித்து கருத்து சொல்ல முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட ஜெகன் மோகன் – குவியும் பாராட்டுகள்!

இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர், தனது முகநூல் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் விஜயகாந்த் நடுவில் நிற்க, மஞ்சள் துண்டு தோளில் போட்ட பெரியவர், கறுப்பு சட்டை போட்டவர், வேள்ளை வேட்டி சட்டையில் பிற அரசியல்வாதிகள், உள்ளிட்ட நிறைய பேர் விஜயகாந்தை சுற்றி, கீழே விழுந்து கும்பிடுகிறார்கள். இந்த கார்ட்டூனைப் பார்த்த திமுகவினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கார்ட்டூனை பதிவிட்ட 6 மணி நேரத்தில் சுதீஷ் இதனை நீக்கியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmdk lk sudhish controversial cartoon on facebook

Next Story
Tamil News Today : துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com