எந்திரன் 2.0 படத்தின் பிரத்தியேக காட்சிகள் இணையத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதனை பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருவதால் படத்தின் குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எந்திரன் 2.0 படத்தின் காட்சிகள் லீக்:
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜேக்சன் ஆகியோர் நடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட ‘2.0’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில், 2.0 படத்தின் உருவாக்கம் குறித்து பிபிசி சிறப்பு வீடியோ தொகுப்பு ஒன்றை தயாரித்து வருகிறது. அதில் படப்பிடிப்பின் பிரத்தியேக காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் குறித்து பல விஷயங்கள் ரகசியமாக இருந்து வரும் வேளையில், பிபிசி-யின் பிரத்தியேக தொகுப்பில் இருந்து சில நிமிட காட்சிகள் லீக் ஆகின. இதனால் படத்தின் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாகுபலி 2, டங்கல் சாதனையை முறியடிக்க 2.0க்கு கைகொடுக்குமா?
இந்த பிரத்தியேக காட்சியில், ரஜினிகாந்த் மற்றும் ஏமி ஜேக்சன் ரோமோ போல உடை அணிந்து நடனம் ஆடுகிறார்கள்.